காவாலாவுக்கு போட்டியாக ‘கூலி’யில் களமிறங்கும் விஜய் பட நடிகை.. எல்லாமே ஒரு பப்ளிசிட்டிக்குத்தான்

Published on: March 18, 2025
---Advertisement---

மற்றுமொரு காவாலா பாடல்: காவாலா பாடலுக்கு பிறகுதான் தமன்னா உலக அளவில் பிரபலமானார். படங்களில் நடித்து ஒரு முன்னனி நடிகையாக இருந்தாலும் இடையில் சிறிய சறுக்கல் தமன்னாவிற்கு இருந்தது. தமிழில் படங்களின் வாய்ப்பு இல்லாமல் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இன்னொரு பக்கம் தெலுங்கில் படங்களில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் வந்த வாய்ப்புதான் காவாலா பாடலில் ஆடும் வாய்ப்பு.

தமன்னாவின் தைரியம்: ஒரு முன்னணி நடிகை, எப்படி ஐட்டம் ஆடலுக்கு ஆடுவார் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது. ஆனாலும் துணிந்து ஆட வந்தார் தமன்னா. பாடல் வெளியாகி யாரும் எதிர்பாராத ஒரு வரவேற்பு அந்த பாடலுக்கு அமைந்தது. அதுவரைக்கும் ஊ சொல்றீயா பாடல்தான் செம வைப்பாக இருந்தது. அந்தப் பாடலை பீட் செய்து உலகம் முழுவதும் பிரபலமானார் தமன்னா.

கூலி: ஏன் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பாடல்தான் ஹைப்பை ஏற்படுத்தியது. இன்று வரை தமன்னா எந்த விழாவுக்கு போனாலும் காவாலா பாடலுக்கு ஆட சொல்லி சந்தோஷமடைகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்திலும் அப்படி ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். இந்த பாடலை கேட்டு ஆடாவதவர்கள் கூட ஆடி விடுவார்களாம்.

பெரிய படம்: அப்படி ஒரு பாடல் கூலி திரைப்படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படம் ஒரு பேன் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. கமலுக்கு விக்ரம் போன்ற ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தை லோகேஷ் கொடுத்த மாதிரி தனக்கும் கொடுக்க வேண்டும் என ரஜினியும் ஒரு பக்கம் எதிர்பார்த்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஐட்டம் பாடலுக்கு விஜய் பட நடிகை நடனம் ஆடப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமில்லை. நடிகை பூஜா ஹெக்டே தான். இவர் இப்போது விஜய் நடிக்கும் ஜன நாயகம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ரஜினிக்காக கூலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment