Connect with us

Cinema News

10 பாட்டுக்கு வெறும் 800 ரூபாதானா? தேவா செய்த ஆச்சரியமான விஷயம்..!.

தமிழ்த்திரை உலகில் இளையராஜா ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஏ.ஆர்.ரகுமான். இப்படி இரு துருவங்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேனிசைத் தென்றல் ஒன்று வீசியது. அதுதான் தேவா. இருவருக்கும் நடுவில் வந்து மளமளவென்று 500 படங்களை அசால்டாகத் தட்டித் தூக்கினார்.

அதிர வைத்த தேவா: இவர் கானா பாடலையும் தமிழ்சினிமாவுக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து அதிரிபுதிரி ஹிட் கொடுத்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் அதிர வைத்தார். சூப்பர்ஸ்டாருக்கே டைட்டில் கார்டு மியூசிக் போட்டு அசர வைத்து விட்டார் தேவா.

ஒரு சோறு பதம்: இவரது இசை பாமர மக்களையும் சென்று சேர்ந்தது. இவரது குரல் கானா பாடகர்களின் வருகைக்கு வித்திட்டது. இந்தக் குரலில் ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ என்ற அந்த ஒரு பாடலே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே. அப்படித்தான் இதுவும். என்ன ஒரு காந்தக் குரல்? அதுல இருக்குற அந்த ஈர்ப்பு ரசிகர்களை அவர் வசம் வளைத்துப் போட வைத்துவிட்டது.

இளையராஜாவுக்கே டஃப்: சினிமாவில் நடிகர்களுக்காக இசை அமைப்பதை விட அவர்களது ரசிகர்களுக்காக இசை அமைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். அதனாலேயே வெற்றி வாகை சூடினார் தேவா. இவர் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல ஊர்களில் மேடைக்கச்சேரி நடத்தி வருகிறார். இப்போது இவர் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாக உள்ளது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

ஒருத்தர் என்னிடம் வந்து சார் நீங்க தேவா தானேன்னு கேட்டார். நானும் ஆமாம்னு சொன்னேன். ‘நான் மேல் மருவத்தூர் கோவிலைப் பற்றி, அம்மாவைப் பற்றி, அடிகளாரைப் பற்றி ஒரு 10 பாட்டு எழுதி வச்சிருக்கேன்.

10 பாட்டுக்கு 800: அதுக்கு நீங்க மியூசிக் பண்ணி தர்றீங்களா? எங்கிட்ட 10 பாட்டுக்கு கொடுக்குற அளவுக்கு பணம் இல்லை. நான் சேர்த்து வச்ச 800 ரூபாய் தான் இருக்கு. அதைத் தரேன். ரெக்கார்டிங் பண்ணித் தர்றீங்களா?’ன்னு கேட்டார். உடனே நான் 10 பாட்டுக்கும் மியூசிக் பண்ணிக் கொடுத்தேன்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top