Connect with us

latest news

ஜோதிகா அப்படி சொன்னதும் கஷ்டமா போச்சு.. ஜெய் பீம் பட நடிகை சொன்ன தகவல்

லிஜோமோல் ஜோஸ்: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். ஜெய் பீம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் செங்கனியாக மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் அவருக்கும் மணிகண்டனுக்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு மணிகண்டன் கதாபாத்திரமும் லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செங்கனியாக கலக்கிய லிஜோமோல் ஜோஸ்: ஒரு மாடர்ன் ஆன பொண்ணு .ஆனால் அந்த படத்தின் கேரக்டருக்காக முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டு கிராமத்து பெண்ணாக அவருடைய நடையில் இருந்து எல்லாமுமே கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரிய விஷயம் .தற்போது அவருடைய நடிப்பில் காதல் என்பது பொதுவுடமை என்ற படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது.

இப்படி ஒரு படமா?: இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். இரண்டு பெண்களுக்கு இடையேயான அன்பு காதல் இவைகளை உணர்த்தும் படமாக இது இருக்கப் போகிறது. ஜெய் பீம் போன்ற ஒரு சமூக கருத்தை பேசிய படத்தில் நடித்த நடிகை எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். ஆனால் எல்லாமே நடிப்பு தான். எந்த ஒரு கதாபாத்திரமானாலும் சினிமாவிற்கு என வந்துவிட்டால் அதை ஒரு கேரக்டராக எடுத்து நடித்து தான் ஆக வேண்டும்.

காதல் என்பது பொதுவுடைமை: அதுவும் இந்த கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக துணிந்து நடிக்க மாட்டார்கள். அதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது லிஜோமோல் ஜோஸுக்கு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நடந்து கொண்டிருக்க லிஜோமோல் ஜோஸ் காதல் என்பது பொதுவுடமை படத்தை பற்றியும் அவர் நடித்த ஜெய் பீம் படத்தை பற்றியும் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார்.

ஜெய் பீம் படத்தில் நடித்து முடித்ததும் படத்தை பார்த்த ஜோதிகா லிஜோமோல் ஜோஸை அழைத்து சூர்யாவை விட இந்தப் படத்தில் நீங்கள் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கூறினாராம். ஜோதிகா இப்படி சொல்லுவார் என நான் நினைக்கவே இல்லை. பெரிய வார்த்தை .ஒரு பக்கம் அதைக் கேட்டதும் கஷ்டமாக இருந்தது .ஏனெனில் சூர்யா எப்பேர் பட்ட நடிகர்.

அவரைவிட நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என சொன்னதும் ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இது ஒரு பெரிய விருதாக நான் நினைத்துக் கொண்டேன். ஜோதிகா ஒரு பக்கம் பல்வேறு படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர். அவரே இப்படி சொல்லும் போது எனக்கு பெருமையாகவும் இருந்தது என கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top