Connect with us

latest news

பிசினஸ் வுமனா மாறுனதும் மேடம் போக்கே மாறிடுச்சு.. அட்ராசிட்டி பண்ணும் நயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகையாக மட்டுமில்லாமல் பிசினஸிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாராவை பலரும் இவருக்கு மேக்கப் போட தெரியவில்லை. நல்ல டிரெஸிங் சென்ஸ் இல்லை என்றும் பல வகைகளில் விமர்சித்திருக்கிறார்கள். குறிப்பாக கஜினி படத்தில் அவருக்கு உண்டான காஸ்ட்யூம் அவருக்கு செட்டே ஆகவில்லை என்பது தான் விமர்சனமாக இருந்தது.

ஆனால் அப்படி இருந்த நயன் இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். ஒரு ஸ்டைலிஷான நடிகையாக, மாடர்ன் குயினாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் குடும்பம். இன்னொரு பக்கம் பிசினஸ் என ஒரு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா செய்யும் செயலால் திரையுலகம் கடுப்பில் உள்ளது. நீண்ட வருடங்களுக்கு முன்பு டிரம்ஸ்டிக் என்ற நிறுவனம் நயனுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து படத்தை கமிட் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை அந்த நிறுவனத்திற்கு கால்ஷீட்டே கொடுக்கவில்லையாம் நயன். கேட்டால் யஷ்ஷுடன் ஒரு படம் , மம்மூட்டியுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லி நாளை கடத்தி வருகிறாராம்.

இன்னொரு பக்கம் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கும் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் நயன். இப்படியே போனால் நயன் மீது திரையுலகம் பெரும் அதிருப்தியில் போய்விடும். லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மேடத்துக்கு இவ்ளோ கெத்து இருக்கக் கூடாது என்று பல பேர் கமெண்ட்டில் கூறி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் தன் உதவியாளர்களுக்கும் சேர்த்து லட்சங்களில் சம்பளம் கேட்கிறார் என்றும் அவர் மீது ஏற்கனவே கடுப்பில் இருந்த தயாரிப்பாளர்கள் மத்தியில் இந்த விஷயம் மேலும் அவர்களுக்கு ஒரு வித காட்டத்தை நயன் மீது ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியே போனால் நயன் மீதிருக்கும் மரியாதையும் போய்விடும் என்பதுதான் பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top