கமலின் சதிலீலாவதி படம் எங்கிருந்து சுட்டது தெரியுமா?!.. வெளிவராத தகவல்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Sathi Leelavathi: கமல்ஹாசன் குணா, மகாநதி, ஹேராம் உள்ளிட்ட பல சீரியஸான கதைகளில் நடித்திருந்தாலும் பல காமெடி படங்களிலும் நடித்திருக்கிறார். பேசும்படம், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா, அவ்வை சண்முகி என சொல்லிகொண்டே போகலாம்.

தமிழ் திரையுலகில் சீரியஸான படங்களில் நடிக்கும் ஒரு நடிகர் அசத்தலான காமெடி படங்களையும் செய்ய முடியும் என்றால் அது கமல்ஹாசன் மட்டுமே. அப்படி பாலுமகேந்திராவின் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் சதிலீலாவதி. 199ம் வருடம் வெளியான இந்த படத்தில் கமலுடன் கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்க அவரை மீட்க மனைவி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த கதை ஏற்கனவே பல படங்களில் வந்திருந்தாலும் பாலுமகேந்திரா கையாண்ட விதம் ரசிக்கும்படி இருந்தது. இந்த கதையை அனந்து எழுத கமலும் அதில் பங்காற்றினார். கிரேஸி மோகன் வசனம் எழுத பாலுமகேந்திரா திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க வேறு நடிகைகள் பரிசீலனையில் இருந்தார்கள். ஆனால், கோவை சரளாதான் நடிக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். ஏனெனில், சரளா போல கோவை பாஷையை வேறு யாராலும் பேச முடியாது என்பது கமலின் நம்பிக்கை. அவர் நம்பியபடியே அந்த பாஷையை பிச்சி உதறினார் சரளா.

மேலும், அந்த படத்திற்கு கமலுக்கு கோவை பாஷயை சொல்லி கொடுத்ததும் சரளாதான். கிரேஸி மோகன் பல காட்சிகளிலும் தன்னுடைய வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்தார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் கமலும், சரளாவும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அல்டிமேட். 1989ம் வருடம் வெளியான ஹாலிவுட் படமான She Devil படத்தின் தழுவலாகவே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தியில் சல்மான்கான், அனில் கபூர் அடித்தும், கன்னடத்தில் மீண்டும் கமல் – அரவிந்த்சாமி நடித்தும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சதிலீலாவதி திரைப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருந்தார். இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட். குறிப்பாக கமலும், கோவை சரளாவும் இணைந்து பாடும் ‘மாருகோ மாருகோ மாருகயி’ பாடல் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment