Connect with us

latest news

‘நான் கடவுள்’ படத்தில் அஜித்துக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆனா இப்போ

அதிர வைக்கும் சம்பளம்: ஆரம்ப காலத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளத்தையும் அதே நடிகர்கள் இப்போது வாங்குவதையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது பல மடங்கு அதிகரித்து தான் இருக்கும். இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் ஒரு சாதாரண சம்பவம்தான். இருந்தாலும் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 150 லிருந்து 160 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். இது விஜயின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது குறைவுதான். எனினும் அவருடைய ஆரம்பகால சம்பளத்தை இப்போது பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தேசிய விருது: குறிப்பாக நான் கடவுள் படத்தில் அவருக்காக பேசப்பட்ட சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள். அதில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் விருது கிடைக்கவில்லை. அப்படி ஒரு கேரக்டர் ஆர்யாவுக்கு.

செட்டாகாத அஜித்: ஆனால் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் என அனைவருக்கும் தெரியும். அந்த படத்தில் அஜித்தும் சில நாட்கள் நடித்தும் கொடுத்தார். அதற்காக தலை முடியை நீளமாக வளர்த்து பல மாதங்கள் அதே தலைமுடியுடன்தான் சுற்றினார் அஜித். ஆனால் பாலாவின் படம் எப்படி இருக்கும் என எல்லோரும் அறிந்த விஷயம் தான். வேகமும் எடுக்காது. அதே நேரம் நடிகர்களை எந்த அளவு தனக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்பதிலும் பாலா உறுதியாக இருப்பார். இது எதற்குமே அஜித் செட் ஆகவில்லை.

கருத்து வேறுபாடு: இந்த படத்தினால் அடுத்தடுத்து படங்களின் வாய்ப்பை தட்டி கழித்தார் அஜித் .ஆனால் நான் கடவுள் படம் நடப்பதாக தெரியவில்லை .இதனால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித். அதற்குள் பாலாவுக்கும் அஜித்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடு, அஜீத் துப்பாக்கி எடுத்து மிரட்டினார் என்றெல்லாம் ஒரு பக்கம் இன்றுவரை சோசியல் மீடியாக்களில் அந்தப் படம் சம்பந்தமான பல செய்திகள் வீடியோக்களாக வருவதையும் பார்க்க முடிகிறது.

அஜித்தின் சம்பளம்: ஆனால் வணங்கான் திரைப்பட ரிலீஸுக்கு பிறகு பாலா பேசும்போது நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அது நடக்கவில்லை. அவ்வளவுதான் என்று சொல்லி முடித்தார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் நான் கடவுள் படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 13.8 கோடி தானாம்.

இதில் அஜித்தின் சம்பளமும் சேர்த்து தான் இந்த பட்ஜெட்டாம். அப்போ அஜித்தின் சம்பளம் 5லிருந்து6 கோடியாகத்தான் இருக்கும் என தெரிகிறது. ஆனால் இப்போது அஜித்தின் சம்பளம் எந்தளவு உயர்ந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதன் பிறகு ஆர்யா இந்த படத்திற்குள் வந்ததும் படத்தின் பட்ஜெட் வெறும் 5 கோடியாக குறைக்கப்பட்டது என தேனப்பன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top