அசிஸ்டண்ட் எவ்வளவோ சொல்லியும் கேட்காத மணிவண்ணன்… இப்படி எல்லாமா நடந்தது?

Published on: March 18, 2025
---Advertisement---

ஒரு பெரிய இயக்குனர் தன் உதவி இயக்குனர்கள் வளரும்போது அவருக்கு மரியாதை கொடுக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விஷயம். அது எப்போ எப்படி நடந்ததுன்னு பார்க்கலாமா…

இயக்குனர் மணிவண்ணன் தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர். கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், 24 மணிநேரம், பாலைவன ரோஜாக்கள், சின்னத்தம்பி பெரிய தம்பி, ஜல்லிக்கட்டு, தீர்த்தக்கரையினிலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சிறந்த வசனகர்த்தாவாகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். சுந்தர்.சி, ராசு மதுரவன், விக்ரமன் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான விக்ரமன் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

அசிஸ்டண்ட்டுக்கு மரியாதை: சூர்ய வம்சம் சூட்டிங் ஸ்பாட்ல நான் டைரக்டர் என்பதால், மணிவண்ணன் சார் என்னை ‘சார் சார்’ என்று அழைத்ததார். அவர் என்னை அப்படி அழைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவரிடம் சென்று ‘சார் நான் உங்களது அசிஸ்டண்ட். என்னை நீங்கள் சார் சார் என்று கூப்பிடுவது சரியாக இல்லை’ என்றேன்.

மிகப்பெரிய வசனகர்த்தா: அதற்கு அவர் நீ இங்கு இயக்குனராக இருக்கிறாய். நான் உனக்கு மரியாதை கொடுத்தால் தான் மற்றவர்கள் உனக்கு மரியாதை கொடுப்பார்கள் என்றார். மேலும் அவர் மிகப்பெரிய வசனகர்த்தா என்பது எல்லாருக்குமே தெரியும். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் நான் என்ன வசனத்தை சொல்கிறேனோ அதைத்தான் சொல்வார் என்றார் இயக்குனர் விக்ரமன்.

சூர்யவம்சம்: 1997ல் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த படம் சூர்யவம்சம். தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா, மணிவண்ணன், பிரியா ராமன், ஜெய் கணேஷ், அஜய் ரத்னம் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக ஆனந்தராஜ் நடித்து இருந்தார்.

இயக்குனர்களான மணிவண்ணனும், ஆர்.சுந்தரராஜனும் காமெடி கேரக்டர்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலா காதலா, சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், திருநாளுத் தேரழகா ஆகிய பாடல்கள் படத்திற்குப் பலம் சேர்த்தன.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment