Connect with us

latest news

சிம்பு சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரு.. அடுத்தடுத்த அப்டேட்டுக்கு இதுதான் காரணமா?

மாநாட்டில் நடந்த மேஜிக்: பல பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் நேரத்தில் சிம்புவின் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.மாநாடு திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய கம்பேக்கை கொடுத்தது. அந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் மாறியது. அந்த படத்திற்கு பிறகு பத்து தல, வெந்த தணிந்தது காடு என கன்டென்ட் ஓரியண்டட் படத்தில் நடித்து ஒரு அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதுவரை காதல் படம் ரொமான்டிக் படம் என இவைகளிலேயே கவனம் செலுத்தி வந்த சிம்புவுக்கு பத்து தல திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தக் லைஃப்: அந்த திரைப்படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அந்த படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏமாந்து கிடக்கும் ரசிகர்கள்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சிம்புவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படமாக தக் லைப் திரைப்படம் தான் இருக்கிறது. ஆனால் மற்ற நடிகர்களை பொருத்தவரைக்கும் விஜய் அஜித் சூர்யா தனுஷ் என அடுத்தடுத்து படங்களை கொடுத்து வரும் நிலையில் சிம்புவின் ரசிகர்கள் ஏமாந்து போய் இருக்கின்றனர். இதைப்பற்றி சிம்புவை ஒரு பார்ட்டியில் சந்தித்த பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சிம்புவிடம் இதைப் பற்றி கேட்டாராம்.

சிம்பு கொடுத்த வாக்குறுதி:என்ன சிம்பு எல்லாரும் ஒவ்வொரு படமாக ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. உங்க படம் வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இப்படியே போனா உங்களுக்கு நல்லா இருக்காது. ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும். ஏதாவது ஒரு அப்டேட்டை கொடுங்கள் என கேட்டாராம். அதற்கு சிம்பு வரும் 2025 ஆம் வருடம் நான் கண்டிப்பாக மூன்று படங்களில் நடிப்பேன் .அதில் எந்த மாற்றமும் இல்லை .அதற்கான அப்டேட்டும் கண்டிப்பாக வெளியாகும்.

என்னுடைய நடிப்பில் மூன்று படங்கள் அடுத்த வருடம் வெளியாகி அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகும் என்று டிசம்பர் மாதம் கூறியிருந்தாராம் .அவர் சொன்னதைப் போலவே சிம்பு செய்துவிட்டார் என தனஞ்செயன் கூறினார். அது மட்டுமல்ல என்னுடைய மூன்று பட அப்டேட்டை நான் சொல்லும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம். நீங்களே அந்த அப்டேட் பற்றி சோசியல் மீடியாக்களில் சொல்லி விடுங்கள் என்று சொன்னதாகவும் தனஞ்ஜெயன் கூறினார் .

அதைப்போல அவருடைய பிறந்தநாளின் போது மூன்று படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமைந்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், ராம்குமார் பாஸ்கரன் இயக்கத்தில் ஒரு படம் அவருடைய தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து சிம்புவின் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top