Connect with us

latest news

ரோகிணிக்கு சாதகமாக மாறும் கதைக்களம்… டிஆர்பியில் பள்ளம் தான்… சிறகடிக்க ஆசை சீரியல் மோசம்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியலில் தேவையில்லாத கதைக்களத்தால் தொடர்ந்து சரியும் நிலையில் இன்னமும் அதையே இயக்குனர் தொடர்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இன்றைய எபிசோட்டில் ரோகிணி சிட்டியை எச்சரித்து விட்டு வித்யாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு மீனா வர வித்யா ரோகிணியை கழட்டி விட்டு மீனாவுடன் தனியாக சென்று பேசுகிறார். காதலிப்பவரை எப்படி தெரிந்து கொள்வது எனக் கேட்கிறார்.

அப்போது மீனா அவர் போனை வாங்கி ஒரு நாள் வச்சிக்கோங்க என்கிறார். உடனே ரோகிணி வித்யாவை அழைத்து அப்படி என்ன பேசுன நீ எனக் கேட்க பெர்சனல் ரொமான்ஸ் விஷயம் என விஷயத்தை சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார் வித்யா.

முத்து மற்றும் செல்வம் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்க அங்கு வரும் கான்ஸ்டபிள் அமைதியாக சாப்பிட அவரை வம்புக்கு இழுக்கிறார் முத்து. அவர் கோபத்துடன் முத்து சட்டையை பிடிக்க அவரை அமைதிப்படுத்தி அனுப்புகிறார் செல்வம்.

சீதா மற்றும் அம்மாவுடன் மீனா பேசிக்கொண்டு அந்த வீடியோவை வெளியிட்டது யார் என கண்டுபிடிக்கணும் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது சீதா கான்ஸ்டபிள் அம்மாக்கு இன்னைக்கு டெஸ்ட் எடுக்கணும் எனக் கூறி கிளம்பிவிடுகிறார்.

சத்யாவின் புரொபசர் வீட்டு கல்யாணத்தில் நடக்கும் எல்லாத்துக்குமே டெக்கரேஷன் செய்யும் ஆர்டர் கிடைக்கிறது. இதை மீனாவிடம் சொல்லுகிறார் சத்யா. மீனா இந்த சந்தோஷமான விஷயத்தை வந்து முத்துவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். ரொம்ப பெரிய ஆர்டர் எனவும் கூறுகிறார்.

ஆனால் செலவு மொத்தமாக நாலு லட்சத்து அம்பதாயிரம் ஆகும் என்றும் கூறுகிறார். கையில் இருக்கும் காசும் செலவு போதாதா எனக் கூறி தயங்கி நிற்கின்றனர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் ரவியிடம் கேட்கலாம் எனப் பேசிக்கொள்கின்றனர். ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் படம் பார்ப்பதை வைத்து சண்டை போட்டு கொள்கின்றனர்.

Continue Reading

More in latest news

To Top