Connect with us

latest news

அந்த விஷயத்துல பாலசந்தரை விட பாரதிராஜாவே டாப்… இதுதான் காரணமா?

பாலசந்தர், பாரதிராஜா இருவருமே தமிழ்த்திரை உலகின் ஜாம்பவான் இயக்குனர்கள். இவர்களில் இயக்குனர் சிகரம் பாலசந்தர். இயக்குனர் இமயம் பாரதிராஜா. பெண்களை கேவலமாக பழைய படங்களில் சித்தரித்து இருப்பார் பாலசந்தர். அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவை வேசியாக நடிக்க விட்டு இருந்தார்.

மனப் போராட்டம்: அதன் காரணமாகவே அவரது படங்கள் அனைத்தும் அப்படியே வந்துவிட்டன. அதே போல அவர்கள் படத்தில் ஒரே கதாநாயகி 3 பேர்களுடன் மனப் போராட்டம் நடத்துவார். அதாவது காதலித்தவர், திருமணம் செய்தவர், தற்போது காதலிக்கும் நபர் என இவர்கள் தான் அந்தக் காதலர்கள்.

மூன்று முடிச்சு: அதே போல அவள் ஒரு தொடர்கதை படத்தில் கதாநாயகியும் இது போன்றே காண்பிப்பார். அவரது காதலனுடன் நாயகியின் தங்கை திருமணம் என்பார். அப்பா அத்தனை பேரையும் விட்டு ஓடிவிட்டார் என்பார். நாகயகியின் தோழியின் காதலன் தோழியின் அம்மாவுடன் தகாத உறவு என்பார். அதே போல மூன்று முடிச்சு படத்தில் மகன் விரும்பும் பெண்ணை மகனை விட குறைந்த வயதில் உள்ள பெண்ணை தந்தைக்கு மனைவியாக்குவார்.

சிந்து பைரவி: அபூர்வ ராகங்கள் படத்தில் மகளை அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சேர்த்து முடிச்சு போட்டு விடுவார்கள். அதே போல சிந்து பைரவி படத்திலும் மகளையே வேசி பட்டம் கட்டுவாள் தாய். அNது போல அம்மா செய்த தவறால் பிறந்தவர் தாய். இந்தப் படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும். ஆனால் பாரதிராஜா அப்படி அல்ல.

பாரதிராஜா: அவர் சட்டையே போடாமல் கதாநாயகியைக் காட்டுவார். இருந்தாலும் அவர்களை பெரும்பாலும் இழிவுபடுத்திக் காட்ட மாட்டார். பதினாறு வயதினிலே, நாடோடித் தென்றல் படங்களே இதற்கு சாட்சி. சில்க் ஸ்மிதாவுக்கு அலைகள் ஓய்வதில்லை படத்தில் அற்புதமான ரோல் கொடுத்துள்ளார். மற்றவங்க மாதிரி தொடையைக் காட்டிப் பணம் வசூலிக்க விரும்பவில்லை. பெண்களை புதுமைப்பெண் என்ற பெயரில் புரட்சிகரமாகக் காட்டினார். அந்தவகையில் பாரதிராஜா தான் ஒரு படி மேல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top