கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கவுண்டமணியும் கலந்து கொண்டு அவருக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் பேசி அத்தனை பேரையும் அசர வைத்தார். விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பி.வாசு அவரைப் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.
இந்த வயசிலும் கவுண்டமணி: வெற்றி விழா மேடைகளில் தான் நானும், கவுண்டமணி சாரும் இருந்துருக்கோம். இன்னைக்கு அவரு ஹீரோவா நடிச்சி நான் கெஸ்டா நடிச்சிருக்கேன். இந்த வயசிலும் கவுண்டமணியை நடிக்க வச்சி அவரு காமெடி என்னைக்கும் நிக்கும்னு நம்பிக்கையோடு படத்தைத் தயாரிப்பாளர் எடுத்திருக்காரு.
24 படங்கள்: கவுண்டமணி சாருக்கு மேனேஜர், டிரைவர், டைரி கிடையாது. டேட் சொன்னா போதும். அதை மனசுல வச்சிக்குவாரு. அவரே வண்டி ஓட்டிக்கிட்டு வருவாரு. தயாரிப்பாளர்களுக்கு மிகவும் எளிமையான நடிகராக இவரை மாதிரி வேறு யாரும் இருப்பாரான்னா தெரியாது. அதிகமா என் படத்துல தான் நடிச்சிருக்காரு. 24 படங்கள் நடிச்சிருக்காரு.
நடிகன்: அதுல 20 படம் ஹிட். நான் 4 பக்கம் சத்யராஜ், கவுண்டமணிக்கு எழுதிக் கொடுப்பேன். அது 6 பக்கமா ஆகிடும். அவ்ளோ பர்பக்டா நடிப்பாரு. நடிகன் படத்துல பிரியாணி காமெடியை எடுக்கவே முடியல. சிரிச்சிக்கிட்டே இருக்காரு. திருப்பி அந்த டயலாக் எடுக்க பயமா இருக்கும். இளையராஜா சாரும் ரீரிக்கார்டிங்ல அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பாரு. அவரு கவுண்டமணி சாரோட மிகப்பெரிய ரசிகர்.
மன்னன்: சிவாஜி சார் சொல்றாரு. ‘நமக்கு எல்லாம் பாக்கியம்டா. இந்த மாதிரி நடிகர் கிடைச்சிருக்காரு’. மிகப்பெரிய நடிகர் எல்லாருமே கவுண்டமணி சாருக்கு ரசிகர். இந்தப் படத்தின் இசையும் ரொம்ப நல்லாருந்தது. நல்ல பாடல்கள் இருக்கு. இந்தப் படம் கண்டிப்பா வெற்றி அடையும். மன்னன் படத்துல உண்ணாவிரதம் சீன்லாம் எடுக்க முடியல. ஆர்டிஸ்ட் சிரிச்சா பரவாயில்ல.
கமர்ஷியலா ஹிட்: கேமராமேன் அசோக்குமாரும் சிரிப்பாரு. கை ஆடிக்கிட்டே இருக்கும். அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனா பாடிலாங்குவேஜ் பார்த்து சிரிப்பாரு. அதனால மொழி தெரியாதவர்களையும் சிரிக்க வைப்பவர் கவுண்டமணி. அந்த விதத்துல இந்தப் படத்துல எல்லாமே இருக்கு. இது கமர்ஷியலா ஹிட் ஆகும்னு நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
