டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுப்பாரு போல.. ஆல் ஏரியாவிலும் இறங்கி அடிக்கும் கட்டப்பா!..

Published on: March 18, 2025
---Advertisement---

Actor Sathyaraj: தமிழ் சினிமாவில் 80’ஸ் மற்றும் 90’ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மைக் மோகன், பாக்கியராஜ், சத்யராஜ் பல நடிகர்களை கூறலாம். இதில் தற்போது வரை படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ரஜினி, கமல். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பது சத்யராஜ் தான்.

நடிகர் ரஜினி, கமல் போன்றவர்கள் ஹீரோக்களாக தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இவர்களின் படங்கள் கூட வருடத்திற்கு ஒன்றுதான் ரிலீஸ் ஆகும். ஆனால் நடிகர் சத்யராஜ் அப்படி கிடையாது. ஆரம்பகாலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு பல ஹீரோவாக நடித்து தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

கேரக்டர் ரோலில் சத்யராஜ்: ஹீரோவாக படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் தற்போது முன்னணி நடிகர், நடிகைகளுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றிருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் படு பிஸியான நடிகராகவும் வலம் வருகின்றார். சமீப நாட்களாக இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார் நடிகர் சத்யராஜ்.

ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்: தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார் நடிகர் சத்யராஜ். தெலுங்கில் வெளியாகி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கேரக்டர் இன்றளவும் நின்று பேசக்கூடிய ஒரு கதாபாத்திரமாக இருக்கின்றது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் இவரின் மவுசு அதிகரித்து இருக்கின்றது. அதிலும் நடிகர் சத்யராஜ் தமிழில் புது முகங்கள் நடிக்கும் அல்லது புது இயக்குனர்களின் திரைப்படங்களிலும் தயங்காமல் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சத்யராஜ் லைன் அப்: தமிழ் சினிமாவில் புது இயக்குனர்கள் தொடங்கி பெரிய பெரிய இயக்குனர்கள் வரை பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் நடிகர் சத்யராஜ். தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் கலந்து கட்டி நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

அதன்பிறகு ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகின்றாராம். அதனை தொடர்ந்து தெலுங்கு பக்கம் வந்தால் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீரமன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றாராம். எல்லா படத்திலும் பெரிய பெரிய சம்பளம் தானாம். அதிலும் சிக்கந்தர் திரைப்படத்தில் தமிழில் ஹீரோக்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கி இருக்கின்றாராம்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment