latest news
விவேக் செய்ய இருந்த உதவியை மறுத்த விக்ரம்… எல்லாத்துக்கும் காரணம் அந்தப் படம்தான்..!
Published on
நடிகர் விக்ரமின் இயற்பெயர் கெனி. சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். விக்ரமும், விவேக்கும் நெருங்கிய நண்பர்கள். விவேக் விக்ரமை கெனி என்று தான் அழைப்பாராம். விவேக் விக்ரம் குறித்து சொன்ன ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. என்னன்னு பாருங்க.
பிலிம் சிட்டியில் பாளையத்தம்மன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. விவேக் தன்னோட ஷாட் முடியவும் தூரத்துல இருந்து ஒருவர் சூட்டிங்கைப் பார்த்துக் கொண்டே இருந்தது தெரியவந்ததாம். பக்கத்துல போய் பார்த்தா அது நடிகர் விக்ரமாம்.
இங்கேயே நிக்கறீயே: அப்போது அவரிடம் விவேக், ரொம்ப நேரமா ‘இங்கேயே நிக்கறீயே. என்னாச்சு’ன்னு கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘சேது படத்தின் சூட்டிங் நடப்பதாகச் சொன்னாங்க. ஆனா யாரையுமே காணோம். அடிக்கடி சூட்டிங்கை நிறுத்தி நிறுத்தி எடுக்குறாங்க’ன்னு சொல்லி இருக்காரு.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்: இதுபற்றி விவேக் சொன்னபோது விக்ரம் பெரியளவில் இந்தப் படத்தால பாதிக்கப்பட்டதாகவும் சொன்னாராம். அப்போது விவேக் விக்ரமிடம் ஒரு தகவல் சொன்னாராம். ‘நான் இப்போ ஒரு படத்துல நடிக்கிறேன். அது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.
நான் ஒண்ணுல நடிக்கிறேன். நீ ஒண்ணுல நடி. உனக்கு ஓகேன்னா நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன்’னாராம். அதுக்கு விக்ரம், ‘இல்ல. இந்த சேது படத்தை நான் ரொம்பவே நம்புறேன். இது அழுத்தமான கதை. மக்கள்கிட்ட நல்லா ரீச்சாகும். படம் ரிலீஸ் ஆனா மக்கள் என்னைக் கொண்டாடுவாங்க’ன்னு சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது போலவே நடந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
சேது: 1999ல் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்புடன் அடையாளமே தெரியாத வகையில் விக்ரம் நடித்த படம் சேது. இந்தப் படத்தில் மனநலம் குன்றியவராக நடித்திருந்தார். அச்சு அசல் அப்படி ஒரு மனநோயாளியை மாதிரியே நடித்து நம்மை ஆச்சரியப்படுத்தி விட்டார் விக்ரம். படத்தை இயக்கியவர் பாலா. இந்தப் படத்திற்குப் பிறகு இவரை சேது பாலா என்றே அழைத்தனர்.
அதே போல விக்ரமுக்கு இந்தப் படத்தில் ‘ச்சீயான்’ என்று பெயர். இந்தப் படத்துக்குப் பிறகு ச்சீயான் விக்ரம் என்றே பெயர் வந்து விட்டது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அபிதா நடித்துள்ளார். சிவகுமார், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். சேதுவுக்கு, வார்த்தை தவறி, காதலென்ன, விடிய விடிய, கான கருங்குயிலே, சிக்காத சிட்டொன்று, எங்கே செல்லும் ஆகிய பாடல்கள் அருமை. 2000ம் ஆண்டுக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்றது.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...