Connect with us

Cinema News

ஆக்‌ஷன் கிங்கையே கடுப்பாக்கிய மகிழ் திருமேனி!.. ஒன்னும் நடக்காத மாதிரியே பேசுறாரே!..

Vidaamuyarchi: தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் அர்ஜூன். சண்டைக் காட்சிகள் மிகவும் ஆர்வமாக நடிப்பார். இவரின் பாடங்களில் சண்டை காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்பதால் இவருக்கு ஆக்சன் கிங் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் மட்டுமில்லை. இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். இவர் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், ஷங்கரின் இயக்கத்தில் இவர் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் ஆகிய படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது.

இன்னமும் ஹீரோ: ரஜினி, கமலுக்கு பின் 60 வயதை தாண்டியும் ஹீரோவாக நடித்து வருவது அர்ஜூன் மட்டுமே. இவரின் மகள் ஐஸ்வர்யாவை தம்பி ராமையாவின் மகன் உமாபதி காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இப்போதும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அர்ஜூன்

விடாமுயற்சியில் வில்லன்: அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்த அர்ஜூன் 13 வருடங்களுக்கு பின்பு மீண்டும் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் ட்வுன் படத்தின் கதையாகும். இதில், சில மாற்றங்களை செய்து மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

மகிழ் திருமேனி மிகவும் மெதுவாக படமெடுப்பவர் என சொல்வார்கள். உதயநிதியை வைத்து உருவான கலகத் தலைவன் படத்தை 3 வருடங்கள் எடுத்தார். எடுத்த காட்சியையே மீண்டும் மீண்டும் எடுப்பார் எனவும் சொல்வதுண்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஊடகம் ஒன்றில் பேசும்போது மகிழ் திருமேனி மறுத்தார்.

இந்நிலையில், அசர்பைசானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்தபோது அர்ஜூனை காத்திருக்க வைத்துவிட்டு மற்ற நடிகர்களை வைத்து காட்சிகளை எடுத்துக்கொண்டே இருந்தாராம் மகிழ் திருமேனி. ஒருகட்டத்தில் கடுப்பான அர்ஜூன் மகிழ் திருமேனியிடம் கோபப்பட்டதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. விடாமுயற்சி படம் பிப்ரவரி ௬ம் தேதி திரைக்கு வருகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top