Connect with us

Cinema News

இதனாலதான் விக்ரம் படத்தில் நடிக்கல!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா ராகவா லாரன்ஸ்!..

Ragava lawrence: நடன நடிகராக சினிமாவில் அறிமுகமானவர்தான் ராகவா லாரன்ஸ். அமர்க்களம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் ஒரு பாடலோடு சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

நடன இயக்குனர்: ஒருகட்டத்தில் நடன இயக்குனராக மாறி விஜய், சிரஞ்சீவி, ரஜினி போன்றவர்களின் படங்களில் வேலை செய்தார். திருமலை விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். ஆந்திரா பக்கம் போய் நாகார்ஜூனாவை வைத்து ஒரு படத்தையும் இயக்கினார். அந்த படம் ஹிட் அடிக்கவே மீண்டும் தமிழுக்கு வந்து முனி என்கிற படத்தை இயக்கி நடித்தார்.

காஞ்சனா: அந்த படம் ஹிட் அடிக்கவே காஞ்சனா படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்யவே காஞ்சனா 2, காஞ்சனா 3 வரை சென்றுவிட்டது. இந்த படங்கள் ராகவா லாரன்ஸை வசூல் குவிக்கும் ஹீரோவாக மாற்றிவிட்டது. எனவே, தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார்.

சமூக சேவை: ஒருபக்கம் நிறைய சமூகசேவைகளையும் அவர் செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளையும், ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார். இதுபோக கஷ்டத்தில் வாடும் பலருக்கும் அவர் உதவி செய்து வருகிறார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் இவர். ரஜினி நடிக்காமல் விலகிய சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் வெற்றியை பெறவில்லை.

விக்ரம் பட வாய்ப்பு: இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பென்ஸ் என்கிற படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. லோகேஷ் அவரிடம் கதையெல்லாம் சொன்னார். ஆனால், லாரன்ஸ் நடிக்கவில்லை.

அதுபற்றி இப்போது விளக்கமளித்த லாரன்ஸ் ‘விக்ரம் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், வீட்டை எரிப்பது போல ஒரு காட்சி இருந்தது. குழந்தைகள் படம் பார்ப்பார்கள் என்பதால் அப்படி நடிக்க நான் மறுத்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார். அதன்பின் அந்த வேடத்தில் பஹத் பாசில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top