Connect with us

latest news

வெற்றிமாறன் கதையை எடுக்கும் கௌதம் மேனன்.. ஆனா அவருடைய டிமாண்ட் என்ன தெரியுமா?

இருவருக்குமே சம்பந்தம் இல்லை: கோடம்பாக்கத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்றால் வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் இயக்கப் போகிறார் என்பதுதான். இருவருமே வேற வேற ஜானர். வெற்றிமாறன் என்றாலே வன்முறை அதிகமாக இருக்கும். ஆனால் கௌதம் மேனன் படங்கள் பெரும்பாலும் ரொமான்டிக் ஸ்டைலிஷ் என இப்படி ஒரு ஜானரில் அவருடைய படங்கள் இருக்கும். இந்த நிலையில் இந்த இருவரின் காம்போவில் ஒரு படம் உருவாகிறது என்றால் அது எப்படிப்பட்ட ஜானரில் வரப்போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கௌதம் மேனன் தற்போது மீண்டும் தனது இயக்கும் பணியை ஆரம்பிக்க இருப்பதாக சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது வெற்றிமாறன் கதையை தான் இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார் கௌதம் மேனன்.

கௌதம் மேனன் மீது எதிர்பார்ப்பு: தமிழ் சினிமாவில் அஜித் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் ஆகியவர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியதால் படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் இவர் மீண்டும் எப்போது படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த காலத்தில் ஸ்ரீதர் என்றாலே ஒரு ஸ்டைலிஷ் ஆன இயக்குனர், பெண்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் என்ற ஒரு பெயர் இருந்தது.

அவருக்குப் பிறகு அதே மாதிரியான ஒரு பெயர் கௌதம் மேனனுக்கு இருந்து வருகிறது. அந்த அளவுக்கு இவருடைய படங்கள் மிகவும் ஸ்டைலிஷ் ஆகவும் இளசுகளை கவரும் விதமாகவும் இருந்தன. அதுமட்டுமல்ல இவருடைய அந்த ஆங்கிலம் கலந்த பேச்சு அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது .இப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இயக்கும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் இயக்கப் போகிறார் என்றும் அந்தப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கௌதம் மேனன் கோரிக்கை; ஏற்கனவே வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் மூன்று படங்களை இயக்குவதாக அக்ரிமென்ட் போட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறதாம் .இதில் கௌதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்திடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வேண்டும் என கேட்டு இருக்கிறாராம்.

ஏற்கனவே இருவரின் காம்போவில் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படமும் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த படம் தான் .ஆனால் ஏ ஆர் ரகுமான் பொருத்தவரைக்கும் அவருடைய சம்பளம் என்பது யாரும் நினைத்து பார்க்க முடியாதது .அதனால் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கௌதம் மேனன் வைத்த கோரிக்கையை ஏற்பார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top