Connect with us

latest news

62 வயசுலயும் யூத்தா இருக்காரு! அர்ஜுன் பற்றிய சீக்ரெட்டை உடைத்த ரெஜினா

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் மீது ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக தயாரிப்பிலேயே இருந்த விடாமுயற்சி திரைப்படம் இப்பொழுதுதான் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

ஏகப்பட்ட போராட்டங்களை தாண்டி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கின்றது. தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மலையாளத்தில் பிரித்திவிராஜ் கூட டிரைலரை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் .இதுவரை இந்த மாதிரி ஒரு ட்ரெய்லரை நான் பார்த்ததில்லை.

படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் சமீபத்திய ஒரு விழா மேடையில் கூறியிருந்தார் பிருத்திவிராஜ். அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை பல நெகட்டிவ் விமர்சனங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தன.

படம் ரிலீஸ் ஆகலாம் ஆகாது என்றெல்லாம் எத்தனையோ யூடியூப் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். இதைப்பற்றி மகிழ் திருமேனி ஒரு பேட்டியில் கூறும்பொழுது இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பொறாமையில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன .இதைப் பற்றி அஜித் கூட என்னிடம் ஏன் இவ்வளவு பொறாமையில் பேசுகிறார்கள்.

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏன் இவ்வாறு எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு அவருடைய ஆதங்கத்தை கூறினாராம். மகிழ் திருமேனி கூறியது வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மியை தான் என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஆரவ், அர்ஜுன், ரெஜினா, திரிஷா என முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இதில் ரெஜினா சில நாட்களாக படத்தைப் பற்றி பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். ட்ரெய்லரை பார்க்கும் பொழுது அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருப்பார் என்று தோன்றுகிறது. படத்தில் அர்ஜுன் மிகவும் யூத்தாக ஸ்டைலிஷ் ஆக நடித்திருக்கிறார். 62 வயதாகியும் இன்னும் அதே இளமையுடன் அர்ஜுன் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தருகிறது.

இந்த நிலையில் அவருடைய இளமையின் ரகசியம் பற்றி ரெஜினா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். படத்தில் அர்ஜுன் ஹேர் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவர் எப்பொழுதுமே படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அவருடைய தலை முடியை தூக்கி காட்டுவது போல அர்ஜுன் அடிக்கடி தலையை நிமிர்த்தி நிமிர்த்தி அவருடைய தலை முடியை சரி செய்வாராம். அது பார்க்கவே மிகவும் க்யூட்டாக இருக்கும் என ரெஜினா கூறினார் .

அது மட்டுமல்ல இந்த வயதிலேயே அவருடைய சருமத்தில் சுருக்கங்களே இல்லை என்றும் கூறினார். மேலும் அவர் பெரும்பாலும் வெஜிடேரியன் டயட் மட்டும்தான் பாலோ செய்கிறாராம். மற்றபடி அவருடைய வழக்கமான டயட் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலும் வெஜிடேரியன் டயட்டை தான் அவர் பாலோ செய்கிறார் என ரெஜினா கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top