Cinema News
அதிக வசூல் செய்த தென்னிந்தியப் படங்களின் லிஸ்ட்… ரஜினியை முந்திய விஜய்!
தமிழ்ப்படங்களைப் பொருத்தவரை இன்னும் 1000 கோடி வசூல் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்காக ரஜினியும், விஜயும் போட்டிப் போட்டார்கள். அப்படி இருந்தும் தொட முடியவில்லை. நெருங்கினார்கள் என்றே சொல்லலாம். ஆனால் தெலுங்குப் பட உலகில் வெளியான பல படங்கள் அசால்டாக 1000 கோடியைத் தாண்டி உள்ளன.
அந்த வகையில் பாகுபலி, புஷ்பா2 படங்களைச் சொல்லலாம். அடிச்சித் தூள் கிளப்பிய அந்தப் படங்கள் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இங்கிருந்து போற இயக்குனர்கள் அங்கு போய் ஜொலிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அவர்கள் இயக்கிய பல படங்கள் சமீபத்தில் பிளாப் ஆகியுள்ளன. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி போன்ற இயக்குனர்களைச் சொல்லலாம். அதனால் அங்குள்ள ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்களைக் கண்டாலே பயப்படுகிறார்களாம். இப்போது தென்னிந்திய படங்களில் அதிக வசூல் செய்தவற்றை லிஸ்ட் போடுவோம்.
ஜெய்லர், லியோ: 9வது இடத்தில் இருக்குற படம் ரஜினி நடித்த ஜெய்லர். இந்தப் படத்தோட மொத்த வசூல் 620 கோடி. 8வது இடத்தில் விஜய் நடித்த லியோ உள்ளது. இந்தப் படத்தின் மொத்த வசூல் 650 கோடி. 7வது இடத்தில் இருப்பது பிரபாஸ் நடித்த சலார்.
இந்தப் படத்தின் மொத்த வசூல் 700 கோடி. 6வது இடத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0. இந்தப் படத்தின் மொத்த வசூல் 800 கோடி. 5வது இடத்தில் இருப்பது பிரபாஸ் நடித்த கல்கி. இந்தப் படத்தின் மொத்த வசூல் 1020 கோடி.
கேஜிஎப் சேப்டர், ஆர்ஆர்ஆர்: 4வது இடத்தில் இருப்பது யாஷ் நடித்த கேஜிஎப் சேப்டர் 2. இந்தப் படத்தின் மொத்த வசூல் 1220 கோடி. 3வது இடத்தில் இருப்பது ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தின் மொத்த வசூல் 1280 கோடி.

பாகுபலி 2, புஷ்பா 2: 2வது இடத்தில் இருப்பது பிரபாஸ் நடித்த பாகுபலி 2. இந்தப் படத்தின் மொத்த வசூல் 1805 கோடி. முதல் இடத்தில் இருப்பது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2. இந்தப் படத்தின் மொத்த வசூல் 1831 கோடி.