Connect with us

latest news

நீதான்யா அடுத்த ராமராஜன்… யாரைச் சொன்னார் இயக்குனர் கஸ்தூரி ராஜா..?!

நடிகர் ராமராஜனை ‘மக்கள் நாயகன்’னு செல்லமாக ரசிகர்கள் அழைத்தனர். அவர் படங்கள் எல்லாமே கிராமிய மணம் கமழும் வகையில் இருக்கும். குறிப்பாக அவர் அரைக்கால் டவுசர் மட்டும் போட்டபடி மாட்டுல பாட்டுப் பாடி நடித்துள்ள படம் எங்க ஊரு பாட்டுக்காரன்.

கரகாட்டக்காரன்: இது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ‘செண்பகமே செண்பகமே’, ‘பேச்சிப் பேச்சி’ என்று மாட்டுடன் பேசியபடி பால் கறப்பதுக்கு அவரை விட்டால் ஆள் இல்லை என்ற அளவுக்கு பேச்சு அடிபட்டது. அதே போல அவரது கரகாட்டக்காரன் படம் பெரிய ரெக்கார்டு பிரேக் செய்தது. அந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு வரும்னு யாரும் எதிர்பார்க்கல.

படத்தில் காமெடி பெரிய பிளஸ். அதிலும் கவுண்டமணி, செந்திலின் வாழைப்பழக் காமெடியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. அவருக்கு வந்த அத்தனைப் படங்களும் சூப்பர்ஹிட்தான்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகர்: அவருடைய படங்களில் இளையராஜாவின் மியூசிக் மனதைக் கொள்ளை கொள்ளும். எல்லாப் பாடல்களுமே சூப்பர்ஹிட்டாகத்தான் இருக்கும். ராமராஜன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதால் தனது படங்களில் அவரைப் போலவே நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது. போதை பொருள்களைத் தொட மாட்டார்.

கஸ்தூரி ராஜா: அந்த வகையில் மக்கள் நாயகனாக ராமராஜன் வலம்வந்தார். அந்தவகையில் இயக்குனர் கஸ்தூரி ராஜா தன் படத்தின் கதாநாயகனை நீதான்யா அடுத்த ராமராஜன் என்று புகழ்ந்துள்ளார். அது என்ன படம்னு அந்த நாயகனே விவரமாக சொல்கிறார் பாருங்க.

அடுத்த ராமராஜன்: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தை ராப்பகலா சூட்டிங் பண்ணி 22 நாள்ல முடிச்சோம். அந்தப் படத்தோட ரஷ்ஷ போட்டுப் பார்க்கும்போது ரெஸ்ட் இல்லாததால் என் முகமே அசிங்கமா தெரிந்தது. ஆனா கஸ்தூரிராஜா சார் ‘என்னய்யா சொல்ற. நீ தான் அடுத்த ராமராஜன்’னு சொன்னாரு என்கிறார் பெருமையாக நடிகர் செல்வா.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top