Connect with us

latest news

பார்க்க நல்லா இருக்கான்.. சிம்ரன் சொன்ன பாடகர்! உடனே கல்யாணம்தான்.. யார் தெரியுமா?

இடுப்பழகி சிம்ரன்: தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தமிழ் தெரியாமல் தான் இந்த சினிமாவிற்குள் வந்தார். ஆனால் இப்போது தமிழில் அழகாக பேசக்கூடிய ஒரு தமிழ் பெண்ணாக மாறி இருக்கிறார் சிம்ரன். தற்போது படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார் .அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு பேட்ட, சீம ராஜா ,அந்தகன் போன்ற குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்களில் மட்டுமே நடித்து வந்தார் சிம்ரன்.

அவருக்கே உண்டான பிளஸ்: அதுவும் இதுவரை ரஜினியுடன் ஜோடியாக நடிக்காத சிம்ரன் பேட்ட படத்தில் நடித்திருந்தது அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் படத்திலும் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிம்ரன். அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் தற்போதும் அவருடைய நடனத்தில் எந்த ஒரு சோர்வும் தெரியவில்லை.

கிரிஷ் சங்கீதா காதல்: அவ்வப்போது மேடைகளில் ஏறும் பொழுது அவருக்கே உரிய திறமையான நடனத்தை ஆடச் சொல்லி தான் ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பாடகரை பார்த்து நல்லா இருக்கான் என சிம்ரன் சொல்ல உடனே ஒரு நடிகை அவரை திருமணம் செய்து கொண்ட தகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாரும் இல்லை பாடகர் கிருஷ் .நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் க்ரிஷ்.

போன் நம்பரை வாங்கிய சங்கீதா:ஆனால் முதன்முதலில் தன்னிடம் காதலைச் சொன்னது சங்கீதா தான் என கிரிஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதுவும் ஒரு விழாவில் தனக்கு விருது கொடுத்ததே சங்கீதா தான் .அப்போதே என்னை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. விழாவிற்கு அடுத்தபடியாக பார்ட்டி நடைபெறும். அந்த பார்ட்டியில் அவருடன் தான் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன். அப்போது போகும் போது என்னுடைய போன் நம்பரை வாங்கினார் சங்கீதா. இப்படி தான் பழக்கம் ஏற்பட்டது.

திடீரென ஒரு நாள் உங்களை நான் காதலிக்கிறேன். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என நினைக்கிறேன் என சங்கீதா சொன்னதாகவும் இதை இவருடைய வீட்டில் பெற்றோரிடம் சொல்ல கிரிஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். கிரிஷின் தாயார் என் பிணத்தின் மீது ஏறி போய் நீ திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் மிரட்டி இருக்கிறாராம்.

சங்கீதாவோ அவருடைய அம்மாவிடம் ஒரு பையனை நான் காதலிக்கிறேன் என சொல்லி போட்டோவை காண்பித்திருக்கிறார். அப்போது சங்கீதா அருகில் சிம்ரன் இருந்தாராம். சிம்ரனும் இவருடைய போட்டோவை பார்த்து பையன் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கான் என சொன்னது சங்கீதாவுக்கு மேலும் ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஏனெனில் சிம்ரனே பார்த்து அழகாக இருக்கான் என சொல்லிவிட்டார் .இவரை விடக்கூடாது என விடாப்பிடியாக கிரிஷை திருமணம் செய்து இருக்கிறார் சங்கீதா. இதை ஒரு பேட்டியில் கிரிஷ் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top