ஐயோ!. 16 வயசு பொண்ணு போல மாறிட்டாரே குஷ்பு!.. எப்படி மேடம் பண்ணீங்க?!…

Published on: March 18, 2025
---Advertisement---

Khushbu sundar: 80களில் மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் குஷ்பு. துவக்கத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோருடன் பல படங்களிலும் நடித்தார். பிரபுவுடன் இணைந்து குஷ்பு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் அவரை பட்டிதொட்டிங்கும் பிரபலமாக்கியது. அந்த படத்திற்கு பின் நம்பர் ஒன் நடிகையாக குஷ்பு மாறினார்.

பிரபுவுடன் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். மேலும், ரஜினி, கமல், சத்தியராஜ், சரத்குமார் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். குஷ்புவுக்கு ஒரு ரசிகர் கோவில் கட்டுமளவுக்கு சென்றது. அதோடு, குஷ்பு இட்லியும் தமிழகத்தில் பிரபமாக துவங்கியது. முறைமாமன் படத்தில் நடித்தபோது அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் சுந்தர்.சிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் குஷ்பு சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், முன்பு போல் அதிக படங்களாக இல்லாமல் சில படங்களிலும் மட்டும் அவ்வப்போது நடிக்கிறார். இல்லையெனில், அவரின் கணவர் சுந்தர் சி இயக்கும் படங்களில் சாமி பாடலுக்கு வந்து நடனமாடுவார். ஒருபக்கம் அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

குஷ்பு – சுந்தர்.சி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார். ஒருபக்கம், சுந்தர்.சி தொடர்ந்து காமெடி திரைப்படங்களை இயக்கி வருகிறார். அவரின் இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து டீன் ஏஜ் பெண் போல மாறி குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அப்படியே வருஷம் பதினாறு படத்தில் வந்த குஷ்பு போலவே இருக்கீங்க’ என பதிவிட்டு வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பும் குஷ்பு உடல் எடையை குறைத்தார். அதன்பின் மீண்டும் வெயிட் போட்ட அவர் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்திருக்கிறார் என கருதப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment