Connect with us

latest news

எம்ஜிஆரையே ஓடவிட்ட சிவாஜி… 75 பக்க வசனம்… ஒன்றரை மணிநேரத்தில் பேசி அசத்திய நடிகர்திலகம்

சிவாஜிக்கு எப்படி பேரு வந்தது? என்ன சாதித்தாரு, எம்ஜிஆர் ஏன் ஓடுனாருன்னு சுவாரசியமான சில விஷயங்களை பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் பகிர்ந்துள்ளார். அதைக் கேட்கும்போது இப்படி எல்லாம் கூட நடந்ததா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்துல எம்ஜிஆர்தான் நடிக்க வேண்டியது. 75 பக்க வசனம். அவரால முடியல. மறுநாள் இரவு அது அரங்கேற்றம். முந்திய நாள் இரவு அண்ணா சொல்றாரு.

ஓடிப்போன எம்ஜிஆர்: என்னால முடியாதுன்னு எம்ஜிஆர் ஓடிப்போயிட்டாரு. அண்ணாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்போ சிவாஜிக்கு நாடக வாய்ப்பு இல்லாம அண்ணாவுடைய அலுவலகத்துல பைன்டரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு.

அவரு ஒரு நாடக நடிகர்னு அண்ணாவுக்குத் தெரியும். ‘கணேசா, நாளைக்கு ராத்திரி டிராமா. அதுக்குள்ள எவ்வளவு முடியுதோ படி. அப்புறம் நாம அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்’னு அண்ணா சொல்றாரு.

காலைல 10 மணிக்கு டயலாக் கொடுக்கறாரு. 2 மணிக்கு வந்து நிக்கிறாரு. ‘என்ன கணேசா..’ ன்னு கேட்கிறார் அண்ணா. டயலாக் எல்லாம் படிச்சி முடிச்சிட்டேன்னு சொல்றார் சிவாஜி. அதுக்குள்ளவான்னு ஆச்சரியப்படுகிறார் அண்ணா.

அரண்டு போன அண்ணா: ரிகர்சல் பார்க்கலாமான்னு கேட்டாரு. சரின்னாரு. 75 பக்க வசனத்தையும் ஒன்றரை மணி நேரத்துக்குள்ள அண்ணா என்ன எண்ணத்தோடு, உணர்ச்சிகளோடு வசனம் எழுதினாரோ அதே உணர்ச்சியோடு பேசிட்டாரு. அண்ணா அப்படியே அரண்டு போயிட்டாரு.

பெரியார் தலைமை: நைட்ல மேடையில பெரியார் தலைமையில ஏறுறாங்க. பெரியாருக்கு நாடகம்னாலே பிடிக்காது. இந்த நாடகத்துல மட்டும் எல்லாரையும் பாராட்டும்போது சிவாஜியா நடிச்சானே. ‘அந்தப் பையன் யாரு’ன்னு கேட்டாரு. கூப்பிட்டு வந்தாங்க. ‘உன் பேரு என்ன’ன்னு கேட்டாரு. ‘கணேசன்’.

சிவாஜி கணேசன்: ‘இன்னைல இருந்து நீ சிவாஜி கணேசன்’னாரு. அதுக்கு அப்புறம்தான் சிவாஜி கணேசன் ஆனாரு. எங்கேயோ போயிட்டாரு. பராசக்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top