latest news
எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான தகவல்
Published on
ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி: எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை என்ற ஒரு பெயருக்கு சொந்தமானவர் நடிகை ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். எம்ஜிஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்கு பின். கிட்டத்தட்ட எம்ஜிஆர் உடன் 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் ஜெயலலிதா. அதுவும் எம்ஜிஆர் உடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை என்றால் அது ஜெயலலிதா தான்.
மேல்நாட்டு நாகரீகத்தை புகுத்தியவர்: அவர் முதன் முதலில் ஆங்கில படம் ஒன்றின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை நடிகைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் அதை அப்படியே தகர்த்து எறிந்தவர் ஜெயலலிதா. கான்வென்டில் படித்தவர். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர். மேல்நாட்டு உடை அணிபவர் .ஸ்டைலாக இருப்பவர். அதுவரை ஸ்லீவ்லெஸ் ஆடையே அணியாத நடிகைகள் மத்தியில் ஃப்ராக் கவுன், ஸ்லீவ்லெஸ் உடை என அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர்.
இரும்பு பெண்மணியாக ஜெயலலிதா:எதற்கும் துணிந்தவர். யாருக்கும் பயப்படாதவர், எதையும் தைரியமாக பேசுபவர், உண்மையிலேயே ஒரு சிங்கப்பெண்மணியாக தான் வலம் வந்தார் ஜெயலலிதா. சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஒரு சிங்கப் பெண்மணியாகத்தான் வாழ்ந்தார். அவர் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அவரை எதிர்த்து பேச முடியாது. அப்படி பேசினால் விளைவு என்ன ஆகும் என்பது உடனுக்குடனே தெரியவரும்.
அரசியலிலும் எம்ஜிஆருக்கு துணையாகவே இருந்தார். அதனாலேயே ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக மாற்றினார் எம் ஜி ஆர். அவருக்கு பிறகு அவருடைய கட்சியை எந்த அளவுக்கு பலம் மிகுந்த கட்சியாக மாற்றினார் என அனைவருக்குமே தெரியும். அவருடைய புகழையும் பெயரையும் ஜெயலலிதா இருக்கும் வரை காப்பாற்றிக் கொண்டுதான் வந்தார். இந்த நிலையில் எம்ஜிஆர் உடன் முதன் முதலில் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
அந்தப் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றிய ஒரு தகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது .முதன் முதலில் ஜெயலலிதா ‘hidden truth’ என்ற ஆங்கில டிராமாவில் நடித்தார். அந்த டிராமாவில் ஜெயலலிதாவை கொலை செய்யும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சோ. அதற்கு அடுத்தபடியாக மீண்டும் ‘under secretary’ என்ற ஒரு ஆங்கில டிராமாவில் சோ ஹீரோவாகவும் ஜெயலலிதா ஹீரோயினாகவும் நடித்தார். இந்த நாடகம் மூலமாக தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா நடிக்க வாய்ப்பு வந்ததாக தகவல் கூறப்படுகிறது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை...
TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர்...
Vijay TVK Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று கரூருக்கு பரப்புரைக்காக சென்ற போது அங்கு கூட்டத்தில்...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று அங்கு...