Connect with us

latest news

துபாயில் பறந்த இந்தியக் கொடி.. 3 ஆம் இடத்தை பிடித்த அஜித் அணி

துபாயில் நடக்கும் dubai 24H கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறது. அந்த வெற்றியை தன்னுடைய அணி நண்பர்களுடன் சேர்ந்து அஜித் கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் ஒரு சமயம் துபாயில் கார் ரேஸுக்காக வந்திருந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பை விட அஜித்திற்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கிறது என அங்கு உள்ள வர்ணனையாளர் ஒருவர் கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு அஜித்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். திரையுலகை சார்ந்த ஒரு சில பேரும் அஜித்திற்காக அங்கு சென்று இருந்தனர். குறிப்பாக ஆரவ், அர்ஜுன் தாஸ் மற்றும் மாதவன் ஆகியோரும் அஜித்துக்கு ஆதரவு கொடுக்க அங்கு சென்று இருக்கின்றனர் .இந்த நிலையில் 911 GT3 ஆர் பிரிவில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஒட்டுமொத்த ரேஸில் 23 வது இடத்தை பிடித்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் கையில் இந்திய கொடியை ஏந்தியபடி தனது அணி நண்பர்களுடன் அஜித் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. கூடவே மாதவனும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அஜித் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் போது யோவ் நான் அவருடைய ஃபேன்யா என்று சொல்லிக் கொண்டே ஓடுகிறார்.

மேலும் மிஸ்டர் அஜித்.. i am your friend madhavan என சத்தம் போட்டு சொல்ல ஆனால் கூட்டத்தில் அது அஜித் காதுக்கு கேட்கவே இல்லை. அந்தளவுக்கு ஒரு ரசிகராக அஜித்தின் வெற்றியை மாதவனும் கொண்டாடி வருகிறார். கடைசியில் அஜித்துடன் மாதவனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதன் முறையாக சொந்தமாக ஒரு அணியை உருவாக்கியதோடு ஆரம்பமே வெற்றி என்ற வகையில் அஜித்தின் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top