Connect with us

latest news

நிதி கேட்டு வந்த ஜெயச்சந்திரன்… அள்ளிக் கொடுத்த இளையராஜா… அவ்வளவு தொகையா?

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு, தெய்வம் தந்த வீடு, காத்திருந்து காத்திருந்து ஆகிய பாடல்களுக்குச் சொந்தக்காரர் சமீபத்தில் மறைந்த பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்.

10வருடம்: மலையாள உலகில் இருந்து வந்தாலும் ஜெயச்சந்திரன் 10வருடமாக தமிழ்ப்பாடல்களைப் பாடுவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். எம்எஸ்வி., பி.சுசீலா ஜோடியை அவ்வளவு பிடிக்குமாம்.

‘நினைக்கத் தெரிந்த மனமே’ அவருக்கு மிகவும் பிடித்த பாடல். மலையாளத்தில் 5000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினாலும் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது தமிழ்ப்பாடல்கள்தான். தமிழில் வரும் வார்த்தைகளை அழகாக உச்சரிக்கக்கூடியதில் வல்லவர்.

எஸ்பிபியின் சங்கராபரணம்: டிஎம்எஸ்சின் ஆரம்பகாலப் பாடல்களை ரொம்ப கேட்பாராம். அதன் உச்சரிப்பை டிஎம்எஸ்தான் நல்லா பாடியுள்ளாராம். எஸ்பிபியின் சங்கராபரணத்தை புகழ்வார்கள். ஆனா கர்நாடக இசை தெரிந்தவர்கள் குறிப்பாக டிஎம்எஸ் போன்றவர்கள் விரும்பமாட்டாங்கன்னும் ஓபனாக பேசினாராம் ஜெயச்சந்திரன்.

75 ஆயிரம்: இளையராஜாவை தேவராஜன் மாஸ்டருடன் ஜெயச்சந்திரன் பார்க்க வந்தாராம். ஏன்னா மலையாளத் திரையுலகில் பொன்விழாவிற்காக நிதி திரட்ட வந்தார்களாம். அப்போ இளையராஜா 75 ஆயிரம் கொடுத்தாராம். இளையராஜாவுக்கு தேவராஜன் மாஸ்டர் குரு மாதிரி.

இது நடந்தது 80களில். அந்தக் காலத்தில் 75 ஆயிரம் என்பது இப்போ 75 லட்;சத்துக்கு சமம். எத்தனையோ பாடல்கள் பாடினாலும் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம்தான் இளையராஜாவின் இசையில் எனக்குப் பிடித்த பாடல் என்கிறார் ஜெயச்சந்திரன்.

ஒரே நாளில் 3 பாடல்: இவர் ஒரே நாளில் 3 பாடல்களைப் பாடினாராம். ராசாத்தி உன்னை, காத்திருந்து, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ஆகிய 3 பாடல்களையும் இளையராஜா இசையில் பாடி அசத்தியுள்ளார் ஜெயச்சந்திரன்.

ஜேசுதாஸ் உடன் போட்டி: இளம் வயதில் பள்ளி அளவிலான இசைப்போட்டியில் ஜேசுதாஸ் உடன் ஜெயச்சந்திரனும் இசைப்போட்டியில் கலந்து கொண்டாராம். அப்போது ஜேசுதாஸ்சுக்கு முதல் பரிசும், ஜெயச்சந்திரனுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது. அந்தவகையில் டிரம்ஸ் வாசிப்பதிலும் ஜெயச்சந்திரன் வல்லவராம். ஒருமுறை ஜேசுதாஸ் பாட இவர் டிரம்ஸ் வாசிக்கும்போது இவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top