Connect with us

latest news

10 வருஷம் கழிச்சு நடந்திருக்கு.. ‘வணங்கான்’ படத்தால் அருண்விஜய்க்கு நடந்த அதே மேஜிக்

வணங்கான் ரிலீஸ்:இன்று பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நாச்சியார் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் வெளியாகி இருக்கிறது .அதனால் அப்போ உள்ள பாலா எப்படி இப்போது உள்ள பாலா எப்படி என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஏனெனில் அந்த காலகட்டம் வரை எந்த ஒரு டிஜிட்டல் மீடியாவும் இந்த அளவு பரபரப்பாக பேசப்படவில்லை.

கோட்டி அருண்விஜய்:ஆனால் இப்போது எல்லாமே டிஜிட்டல் மையமாக்கப்பட்ட நிலையில் அதற்கு ஏற்ப பாலா எப்படி அவரை தயார்படுத்தி இருக்கிறார். படங்களில் ஏதாவது புதுமைகளை கொண்டு வந்திருக்கிறாரா என்பதை அறியவே ரசிகர்கள் காத்திருந்தார்கள். அதற்கேற்ப இன்று வணங்கான் திரைப்படமும் வெளியானது. படத்தில் அருண் விஜய் காது கேளாத வாய் பேசாத கோட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அமோக வரவேற்பு:படம் முழுக்க எந்த வசனமும் இல்லாமல் தன்னுடைய பாவனைகளாலும் சைகைகளாலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். தமிழக முழுவதும் 500 திரையரங்குகளில் படம் வெளியானது .படத்தை பார்க்க ரசிகர்கள் ஆரவாரமாக சென்றனர். அப்போது ஒரு தியேட்டரில் அருண் விஜயை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

ரசிகர்களின் அந்த வரவேற்பை பார்த்ததும் அருண் விஜய் தன்னை அறியாமலேயே கண்கலங்கி அந்த கூட்டத்தின் நடுவே நடந்து சென்றார். இதே மாதிரியான ஒரு மேஜிக் தான் 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அவருக்கு நடந்தது. என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு முன்பு வரை அருண் விஜய் காணாமலேயே இருந்தார். அந்த படம் தான் அவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.

விக்டர் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படும் கதாபாத்திரம். அதுவும் அஜித்துக்கு வில்லன் எனும் போது கூடுதல் மாஸ் அந்த கேரக்டரில் இருந்தது. அதை சிறப்பாகவே வெளிப்படுத்தினார் அருண் விஜய். அப்போதும் என்னை அறிந்தால் திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் அவர் திரையரங்கிற்கு வரும் பொழுது ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வரவேற்றதை பார்த்து அந்த நேரத்திலும் கண்கலங்கினார் அருண் விஜய். ஏனெனில் சினிமாவில் நீண்ட வருடமாக போராடும் ஒரு நடிகன் தான் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு வணங்கான் படத்தின் மூலம் தான் அந்த மேஜிக் நடந்திருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top