latest news
எம்எஸ்விக்கு இசை அமைக்குற வாய்ப்பு எப்படி கிடைத்ததுன்னு தெரியுமா?… மகளே சொன்ன தகவல்
Published on
தமிழ்சினிமா உலகில் ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவர் எம்எஸ்.விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர், சிவாஜி கால கட்டத்தில் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். இவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது? ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை அவரது மகள் லதா மோகன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
அப்பாவுக்கு அப்போ நாலு வயசு. தாத்தா இறந்துட்டார். பாட்டி மகன்கூடவே இருந்துட்டாங்க. அப்பா நாலாங்கிளாஸ் தான் படிச்சிருக்காரு. இசை மீதுள்ள விருப்பத்தால ஸ்கூலுக்குப் போகல. வாத்தியாருக்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டாரு. நாடகத்துறையினருடன் நல்ல பழக்கம். பல ஊருக்குப் போய் வேலை செஞ்சிருக்காரு. படத்துல நடிக்கிற வாய்ப்பும் வந்தது. ஆனாலும் மியூசிக்ல தான் இன்ட்ரஸ்ட்.
சினிமாவுல ஜெயிக்கணும்னு தான் ஆசை. அதுக்காக குடும்பத்தைப் பிரிஞ்சி வருஷக்கணக்குல அலைஞ்சிருக்காரு. சபாக்கள், ஸ்டூடியோக்கள், தியேட்டர்களுக்கு எல்லாம் போய் தின்பண்டங்களை விற்பனை செய்தார். சினிமாக்காரங்க வீட்டுலயும் உதவியாளரா வேலை செய்தார்.
அப்புறம் வீட்டுக்கு லட்டர் போட்டுள்ளார். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன். நீங்க எங்கூட வந்து தங்கலாம்னு சொல்லவும் குடும்பத்தோடு சேலத்துல இருந்தார். அப்புறம் கல்யாணமானதும் சென்னைக்கு வந்துவிட்டார். இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் ஐயாவிடம் உதவியாளராக இரு;நதார்.
அவர் திடீரென மறைந்ததும் அவர் கைவசம் வைத்திருந்த சில படங்களுக்கு இசை அமைத்தார். ஆரம்பத்தில புதுமுகம்னு பலரும் தயங்கினாங்க. அப்புறம் எம்எஸ்வி மியூசிக் போட்டாதான் படம் ஓடும்கற ரேஞ்சுக்கு தன்னோட திறமையால வளர்ந்து விட்டாராம் எம்எஸ்வி. அவரோட 7 பிள்ளைகளையும் நல்லபடியாக வளர்த்தார். மேற்கண்ட தகவலை எம்எஸ்வி.யின் மகள் லதா மோகன் தெரிவித்துள்ளார்.
எம்எஸ்வி. காதல் மன்னன், காதலா காதலா படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர்களான ஏ.பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகியவர்களுடன்தான் பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் மட்டும் 800 படங்கள் வரை இசை அமைத்துள்ளார். இது தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...