Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். கேப்பே விடாமல் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து இந்த வயதிலும் பிஸியான நடிகராக இருந்து வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தின் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த காம்போ தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் தான். அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று ரஜினிகாந்தின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சௌபின் சாகீர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
எல்சியு-வில் இல்லாமல் தனிப்பட்ட கதையாக உருவாகி வருகின்றது. நகை கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.
சுதந்திர தின வார விடுமுறையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்துடன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுக்க முழுக்க போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இதில் ஒரு சென்டிமென்ட் இருக்கின்றது.
அதாவது ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் கூலி திரைப்படத்தையும் அந்த மாதத்தில் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைகளை பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
நேற்றைய தினம் ரஜினிகாந்த் கூலி படத்தின் சூட்டிங்க்காக தாய்லாந்து கிளம்புவதாக கூறினார். மேலும் பேங்காக்கில் வரும் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
