Connect with us

latest news

அதிக சம்பளம் கேட்டு ஏமாந்து போன நடிகர்திலகம்… சிவாஜியின் படத்தை எரிக்கச் சொன்ன தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமா உலகில் ப வரிசை இயக்குனர்களுக்கு என்றைக்குமே மவுசுதான். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா, பீம்சிங் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதுல தவிர்க்க முடியாத நபர்தான் எஸ்.பாலசந்தர். இவர் இயக்குனர் மட்டுமல்ல. இசை அமைப்பாளரும் கூட. வீணை பாலசந்தர்னு சொல்வாங்க.

அவரது படங்கள் தமிழ்சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. அவரது படங்களில் முக்கியமான படம் அந்த நாள். எந்த விதமான சண்டைக்காட்சிகளும், பாடல்காட்சிகளும் இல்லாமல் வந்த முதல் தமிழ்ப்படம் இதுதான். அதே மாதிரி முதல் ஆன்ட்டி ஹீரோவை அறிமுகப்படுத்தியதும் இந்தப் படம் தான்.

இயக்குனர் வீணை பாலசந்தர் உலக சினிமாக்களை ரசிக்கக்கூடியவர். அவர் ஜப்பானில் புகழ்பெற்ற ரஷமோன் படத்தைப் பார்க்கிறார். அந்தப் படத்தின் திரைக்கதை பாணி அவருக்கு ரொம்பவே பிடிக்கிறது. ஒரு நாடகம் எழுதுகிறார். அதை ஆல் இண்டியா ரேடியோவில் போய் சொல்கிறார். அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.

Veenai balachander, AV Meyyappa chettiayar

Veenai balachander, AV Meyyappa chettiayar

அதே கதையை ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரிடம் சொல்ல அவர் ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்த்ததால் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இந்தப் படத்தில் பைட், சாங்ஸ் இல்லாம படமாக்க மெய்யப்பச் செட்டியாரக்கு விருப்பமில்லை. இருந்தாலும் கதையின் மேல் உள்ள நம்பிக்கையால் ஒத்துக்கொள்கிறார். படம் தயாராகிறது.

முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம். அவருடைய நடிப்பு இயக்குனரை ஈர்க்கவில்லை. அதன்பிறகு கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் என்.விஸ்வநாதன். மோகமுள், மூன்று முடிச்சு, பாபா படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு அப்போது இயக்குனரை ஈர்க்கவில்லை.

அதனால் சிவாஜியை வைத்து மறுபடியும் முதல்ல இருந்து ரீஷூட் பண்ண நினைக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதற்கு இயக்குனர் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே தயாரிப்பாளர் இவருக்கு தர வேண்டிய செட்டில்மெண்டைக் கொடுத்துடு. அந்த ரீலைக் கொண்டு வந்து என் கண் முன்னால எரிச்சிடுன்னு தயாரிப்பு தரப்பில் இருந்த ஒருவரிடம் சொல்றார்.

இதைக்கேட்டதும் பாலசந்தர் உடனே அதிர்ச்சி ஆகிறார். உடனே சிவாஜியை வைத்து ரீஷூட் பண்ண ஒத்துக் கொள்கிறார். சிவாஜியை முதல் படமான பராசக்தியில் அறிமுகப்படுத்தியவரே ஏவிஎம்.மெய்யப்பச் செட்டியார்தான். அதனால அவருக்கு இந்த அந்தநாள் படத்தை சிவாஜியை வைத்து எடுக்கணும்னு முதல்ல இருந்தே ஆசை இருந்துருக்கு.

antha naal

antha naal

ஆனா பாலசந்தர் சிவாஜி இதுல நடிக்க எப்படி ஒத்துக்குவாருன்னு தயக்கம் இருந்ததாம். சிவாஜியும் இந்தக் கதை புதுமையாக இருந்ததால் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் சிவாஜி. அதற்கேற்ப சிறந்த நடிப்பைக் கொடுத்து விட்டார். ஆரம்பத்தில் சிவாஜி இந்தப் படத்தில் நடிக்க 40 ஆயிரம் சம்பளம் கேட்டுள்ளார்.

அதற்கு மெய்யப்பச் செட்டியார் 25 ஆயிரம் தருவதாக கூற பேரம் பேசுவது நீடித்தது. உடனே இயக்குனர் தினமும் 1000 ரூபாய் கொடுத்துவிடலாம் என்கிறார். அப்படின்னா படம் முடிய குறைந்தது 40 நாளாவது ஆகும் என்ற கணக்கில் தான் கேட்டது கிடைத்து விடும்னு சிவாஜியும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் படம் 17 நாளில் முடிந்து விடுகிறது. சிவாஜிக்கு தயாரிப்பாளர் கொடுப்பதாக சொன்ன 25 ஆயிரமும் கிடைக்காமல் போகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top