Connect with us

latest news

பாடலாசிரியரைக் கேவலப்படுத்திய வித்யாசாகர்… அப்புறம் கொடுத்த மரியாதையைப் பாருங்க…!

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் ரன். படத்தில் பாடல்கள், பைட், காமெடின்னு எல்லாமே சூப்பராக இருந்தது. இந்தப் படத்தில் ‘காதல் பிசாசே’ என்று ஒரு பாடல் வரும். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் எப்படி உருவானதுன்னு பாடல் ஆசிரியர் யுகபாரதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் ‘பல்லாங்குழியில்’ பாடலை நான் எழுதினேன். அது பெரிய ஹிட் அடித்தது. அதனால் எனக்கு ரன் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். அவர் என்னை வித்யாசகரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது நான் ஏற்கனவே எழுதிய 2 கவிதைப் புத்தகங்களைக் கொண்டு போனேன். அவர் மேலும் கீழுமாக என்னைப் பார்த்தார்.

yugabharathi

yugabharathi

புத்தகங்களை அலட்சியமாகத் தூக்கிப் போட்டார். அப்புறம் நான் எழுதிய பல்லாங்குழி பாடலைப் பற்றி பேசும்போது அது எப்படி வட்டமாக இருக்கும்னு கேட்டார். நான் சொன்ன பதில் அவருக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து லிங்குசாமி பாடலுக்கான சிச்சுவேஷனை சொன்னார். அந்தப் பாடலில் காதலன் ஒரு கடிதம் எழுதுவதுதான் சிச்சுவேஷன். அதற்கு வழக்கம்போல நலம், நலமறிய ஆவல் அப்படிங்கற வார்த்தைகள் எதுவுமே வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டார் வித்யாசாகர்.

அப்படின்னா எப்படி எழுத முடியும்னு நான் அவர்கிட்ட கேட்டப்ப பதிலே சொல்ல வில்லை. தொடர்ந்து நான் லிங்குசாமியிடம் பாட்டு எழுதக்கூடாதுங்கறதுக்காகத்தான் அவர் அப்படி செய்கிறார். நான் எழுதலன்னு சொன்னார். நீ கண்டிப்பா எழுதிட்டு வா. பார்த்துக்கலாம்னு லிங்குசாமி சொன்னார். தொடர்ந்து நடுராத்திரி இந்தப் பாட்டை எப்படி எழுதுவதுன்னு யோசித்தேன்.

அப்போது ஒரு சித்தர் பாடலைப் படித்தேன். அதில் காதலியைப் பிசாசுன்னு போட்டு இருந்தது. உடனே காதல் பிசாசுன்னு ஆரம்பித்தேன். அப்புறம் என் நண்பன் ‘நன்றாக இருக்கிறாயா’ன்னு போன் பண்ணிக் கேட்டான். ‘இருக்கிறேன்’ என்றேன். ‘ஒண்ணு நல்லா இருக்கேன்னு சொல். இல்லைன்னா இல்லைன்னு சொல். ரெண்டுக்கும் நடுவுல இப்படி சொன்னா எப்படி’ன்னான். உடனே எனக்கு ‘சௌக்கியம்’ என்ற வார்த்தை மனதில் பட்டது. தொடர்ந்து ‘காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்று எழுதினேன்.

kathal pisase song

kathal pisase song

பாடல் வரிகளை எழுதி விட்டுச் சென்ற போது வாகன விபத்து. இந்த நிலையில் இப்படியே செத்துட்டா பரவாயில்லைன்னு நினைச்சேன். தொடர்ந்து அந்த வார்த்தையையும் எழுதினேன். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது. அதைக் கொண்டு போய் வித்யாசகரிடம் கொடுத்தேன்.

கண்டிப்பா நல்லா இல்லைன்னு சொல்வாருன்னு நினைச்சேன். ஆனா அது சூப்பரா இருக்குன்னு சொல்லி இனி நீதான் என் எல்லா பாடல்களையும் எழுதணும்னு சொல்லிட்டார். அப்படி அவருக்கு கிட்டத்தட்ட 300 பாடல்கள் வரை எழுதிருக்கேன் என்றார் யுகபாரதி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top