யோகிபாபுவாலதான் எனக்கு இந்த நிலைமை… எப்படி இருந்த நடிகை? இப்படி ஆயிட்டாங்க

Published on: March 18, 2025
---Advertisement---

யோகிபாபு:

திறமை இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கும் நடிகர் யோகிபாபு. சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஒவ்வொரு இளைஞர்களும் சினிமாவை பற்றிய புரிதலை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். நல்ல நிறமாக இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் இல்லை. திறமை இருக்க வேண்டும்.

அவன் கண்டிப்பாக ஜெயித்துவிடுவான். அப்படி ஆரம்பத்தில் பல போராட்டங்களை தாண்டி இன்று யோகிபாபு சினிமாவில் கொடிகட்டி பறக்கிறார். அதுவும் பெரிய நடிகர்களின் படங்களில்தான் நடிப்பேன் என்று இல்லாமல் சின்ன சின்ன படங்களாகட்டும் தன்னுடைய தேவை அந்தப் படத்திற்கு தேவை என்றால் உடனே கால்ஷீட் கொடுத்துவிடுகிறார் யோகிபாபு. சொல்லப்போனால் இன்று பல முன்னணி ஹீரோக்களை விட யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பதுதான் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

saranya

saranya

இருந்தாலும் சொன்ன தேதியில் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போய்விடுகிறார். இதனால்தான் அவர் நடித்த படங்களின் புரோமோஷன்களில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை பல பேர் பலவிதமாக விமர்சனம் செய்கின்றனர். இந்த நிலையில் யோகிபாபுவால்தான் இன்று இப்படி இருக்கிறேன் என ஒரு நடிகை பேட்டியில் கூறியது வைரலாகி வருகின்றது.

அவர் வேறு யாருமில்லை. காதல் பட நாயகி சரண்யா. சந்தியாவுக்கு தோழியாக அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு வேறு எந்தப் படங்களிலும் சரண்யாவை பார்க்க முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்து மொட்டைத் தலையுடன் இருக்கும் படியான ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரும் அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தாராம்.

saranya

saranya

அப்போதுதான் யோகிபாபுவின் ஒரு வீடியோவை பார்த்திருக்கிறார். அதில் திருத்தணி போய்வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என அந்த வீடியோவில் கூறியிருப்பாராம் யோகிபாபு. அதை பார்த்த பிறகு சரண்யாவும் திருத்தணி போய் மொட்டை அடித்திருக்கிறார். அதுவும் அரசு பேருந்தில்தான் பயணம் செய்தாராம். அங்கு போனபிறகுதான் அடுத்து என் வாழ்க்கையும் மாறியது என கூறியிருக்கிறார்.

இப்போது தனியாக டப்பிங் ஸ்டூடியோ வைத்து பல படங்களுக்கான டப்பிங் வேலைகள் இவரது ஸ்டூடியோவில்தான் நடந்து வருகிறதாம். இதை ஒரு பேட்டியில் மிகவும் மகிழ்ச்சியாக கூறினார் சரண்யா.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment