சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஷாம்பு விற்ற விஜயகாந்த்!.. கேப்டன் இதெல்லாம் செஞ்சிருக்காரா?!..

Published on: March 18, 2025
---Advertisement---

Vijayakanth: திரையுலகமும், ரசிகர்களும் பல நடிகர்களை பார்த்திருக்கிறது. ஆனால், எல்லோரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சில நடிகர்களுக்கு மட்டுமே அந்த இடம் கிடைக்கும். அது அவர்கள் சிறந்த நடிகர்களாக இருந்ததால் அல்ல, அவர்கள் நல்லவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராகவும் இருந்திருப்பார்கள்.

அப்படி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் விஜயகாந்த். அவர் ஒன்றும் நடிப்புக்கான தேசிய விருதை வாங்கியது இல்லை. சிவாஜி, கமல் போல அவர் நடிப்பில் உச்சமும் தொட்டதில்லை. அவர் தன்னை ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக மட்டுமே அதிகம் காட்டியிருக்கிறார். அதேநேரம், சத்ரியன், செந்தூரப்பூவே, சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் தனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும் என காட்டியிருக்கிறார். விஜயகாந்த் அழுதால் ரசிகர்களுக்கே கண் கசியும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடிப்பார். ஆனால் இந்த கட்டுரை அதை பற்றியதில்லை. விஜயகாந்தை பற்றி யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றியது.

விஜயகாந்தின் அப்பா மதுரையில் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்தார். இப்போதும் அது உறவினர்களால் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கு சரியாக போகாத விஜயகாந்த் ஒரு கட்டத்தில் படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் ரைஸ் மில்லை கவனித்தார். அதன்பின் சினிமா ஆசை வர அப்பா சொல்லியும் கேட்காமல் சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

சில வருட போராட்டங்களுக்கு பின் வாய்ப்புகள் கிடைக்க பல தடைகளை தாண்டி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன் வேறு வேலை செய்திருப்பார்கள். ரஜினி கூட பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தார்.

அதேபோல், விஜயகாந்த் ஒரு ஷேம்பு கம்பெனியில் விற்பனை பிரதிநிதி அதாவது ‘Sales Representative’ ஆக வேலை செய்தார் என்கிற தகவல் வெளியே தெரியவந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஒன்றை வைத்திருக்கும் ஆர்.எஸ்.,மனோகர் என்பவர்தான் இந்த ஆச்சர்ய தகவலை கூறியிருக்கிறார்.

1970களில் இருந்தே எனக்கு விஜயகாந்தை தெரியும். அப்போது அவரின் பெயர் விஜய ராஜ். திருவனந்தபுரத்திற்கு வெல்வெட் ஷாம்பு கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலை செய்ய வந்தார். அதன்பின் ஒரு நகைக்கடையிலும் அவர் சேல்ஸ் மேனாக வேலை செய்தார். அப்போது இங்கே 3 தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகும். விஜயகாந்த் அடிக்கடி படம் பார்க்க தியேட்டருக்கு வருவார். மலையாள நடிகர் பிரேம் நசீரின் தீவிர ரசிகர் அவர். அவரின் ஒரு படத்தை கூட விஜயகாந்த் மிஸ் பண்ண மாட்டார்.

அதன்பின் அவர் நடிகரான பின்னரும் சில சமயங்களில் இந்த தியேட்டருக்கு வருவார். அப்போது எப்படி இருந்தாரோ அப்படித்தான் பேசுவார். அவரிடம் எந்த மாற்றத்தையும் நான் பார்த்தது இல்லை’ என மனோகர் சொல்லி இருக்கிறார். விஜயகாந்த் மறைந்து சமீபத்தில்தான் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment