Connect with us

Cinema News

படத்துல எல்லா கேரக்டரும் வேஸ்ட்!.. தன்னோட ஸ்டைலில் விமர்சனம் சொன்ன புளூ சட்டை..!

ஐடென்டிட்டி: மலையாள சினிமாவில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி. இந்த வருடத்தின் முதல் படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டது என்றாலும், அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.

கிரைம் திரில்லர் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். படம் மிக விறுவிறுப்பாக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும், மற்றொரு பக்கம் படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

படத்தின் கதை: ஒரு துணிக்கடையில் ட்ரையல் ரூமில் பெண்கள் ஆடை மாற்றுவதை ஒருவர் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறார். பின்னர் அவரை ஒருவர் கொலை செய்து விடுகின்றார். இதனை நேரில் பார்த்த சாட்சி திரிஷா. ஆனால் திரிஷாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி பேஸ் பிளைன்ட் என்கின்ற பாதிப்பு ஏற்படுகின்றது. இருப்பினும் கொலை செய்த நபரின் முகம் ஞாபகம் இருந்ததால் அதனை படமாக வருகிறார்கள்.

அந்த படத்தை வரையக்கூடிய நபராக வருபவர் தான் டொவினோ தாமஸ். நடிகை திரிஷா அடையாளங்களை கூற அவரும் படமாக வருகின்றார். கடைசியில் பார்த்தால் டொவினோ தாமஸ் முகமே படமாக வருகின்றது. இதை பார்த்து போலீஸ் அதிகாரியான வினய் அதிர்ச்சி அடைகின்றார். கடைசியில் கொலை செய்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

புளூ சட்டை மாறன் விமர்சனம் : ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு அந்த படம் குறித்து விமர்சனத்தை பகிர்ந்து வருபவர் சினிமா விமர்சகரும் இயக்குனருமான புளூ சட்டை மாறன். மற்ற சினிமா விமர்சனங்களை காட்டிலும் இவரின் விமர்சனம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் ஐடென்டிட்டி படத்திற்கு தனது விமர்சனத்தை கூறி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்ததாவது ‘ படத்துடைய ஆரம்பத்தில் ஒரு கதையை கூறுகிறார்கள். அது மிகவும் ஸ்லோவாக செல்கின்றது. அடுத்தடுத்து இதுதான் நடக்கப் போகின்றது என்பதை ஓபன் ஸ்டோரி ஆகவே வைத்திருக்கிறார்கள். மலையாள சினிமாவில் ஒரு வித்தை செய்வார்கள். அதாவது நம்ம ஒரு கதை என்று நினைத்துக்கொண்டு இருப்போம். அந்த கதை இது கிடையாது என்று கூறி வேறொரு டிவிஸ்டை வைத்து முடித்து இருப்பார்கள்.

அதே போல் தான் இந்த படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஒரு கதை இரண்டாவது பாதியில் ஒரு கதை வருவதால் எதுதாண்டா படத்தின் கதை என்பதுபோல் ஆகிவிட்டது. படத்தை பிரமாண்டமாக செலவு செய்து நன்றாக எடுத்து இருக்கிறார்கள். இரண்டு பைட் மற்றும் சேச்சிங் சீன்ஸ் அனைத்துமே மிகச் சிறப்பாக காட்சிப்படுத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சலிப்பை ஏற்படுத்தியதால் பெருசாக ரசிக்க முடியவில்லை.

படத்தில் ஒரு ஸ்ட்ராங்கான வில்லன் இல்லவே இல்லை. ஹீரோவுக்கு தேவையில்லாமல் ஒரு முன் கதை வேற வருகிறது. போலீஸ் அதிகாரியான வினய் கதாபாத்திரமும் அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக இல்லை. திரிஷா கேரக்டரும் வேஸ்ட் பண்ணி தான் வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையை இவர்கள் இஷ்டத்திற்கு வளைத்து வளைத்து எடுத்து வைத்திருக்கிறார்கள்.

படத்துல வரும் வில்லன் தொடங்கி ஹீரோ, ஹீரோயின், போலீஸ் அதிகாரி என அனைவருமே ஒரே பிளாட்டில் தங்கி இருக்கிறார்கள். இது பொது பிரச்சனையா இல்ல பிளாட் அசோசியேஷன் பிரச்சனையா? என்பதே தெரியவில்லை. படம் முடிஞ்சு முடிஞ்சு ஆரம்பிக்குது. அத பாக்க நம்மளால தான் முடியல’ என்று கூறியிருக்கின்றார்.

Continue Reading

More in Cinema News

To Top