Connect with us

Cinema News

லைக்கா தமிழ்குமரன் ராஜினாமா? விடாமுயற்சியால் இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ?

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் துணிவு. அந்த படத்திற்கு பிறகு லைக்கா தயாரிப்பில் அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக அடுத்த படத்தின் பட வேலைகள் ஆரம்பமானது. ஆரம்பித்த நேரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அந்த படம் விறுவிறுப்பாக நடந்திருந்தால் இந்நேரம் லியோ படம் ரிலீசான நேரத்திலேயே அஜித்தின் அந்த படமும் ரிலீஸ் ஆகி இருக்கும்.

ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் படத்தின் வேலைகள் ஒட்டுமொத்தமாக முடிந்திருக்கின்றன. லைக்கா நிறுவனத்தைப் பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டில் அவருடைய நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர் தமிழ்குமரன். இவருடைய தலைமையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன.

நிறுவனத்திற்கு ஒரு விசுவாசம் உள்ள நல்ல மனிதராக இன்றுவரை இருந்து வருகிறார் தமிழ்குமரன். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு லைகா நிறுவனத்திலிருந்து தமிழ்குமரன் ராஜினாமா செய்யப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் வரை அவர் இந்த பொறுப்பில் இருப்பார் என்று மட்டும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

படத்தை பற்றி நாள்தோறும் பல சர்ச்சையான விஷயங்கள் கிளம்பி வருகின்றன. படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ஒரு சிலரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என ஒரு சிலரும் கூறி வருகிறார்கள். படத்தில் ஏகப்பட்ட வேலைகள் இன்னும் நடந்து கொண்டே வருகின்றன. இன்னும் சென்சாருக்கு படம் அனுப்பப்படவில்லை. பின்னணி இசை முடிவடையவில்லை .போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளில் ஏகப்பட்ட பணிகள் இருக்கின்றன.

trisha

trisha

இப்படி இருக்கும் பொழுது பொங்கலுக்கு எப்படி ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு எந்த தைரியத்தில் பொங்கல் ரிலீஸ் என டீசரில் வெளியிட்டார்கள் என்று தான் தெரியவில்லை. இன்னொரு பக்கம் அஜித் இன்று குடும்பத்துடன் நியூ இயரை கொண்டாட சிங்கப்பூர் சென்று விட்டார். அவருடைய வேலை முடிந்து விட்டது. அவரை பொறுத்த வரைக்கும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். ஆனால் படத்தின் பிரச்சினையைப் பற்றி என்ன நடந்தால் நமக்கு என்ன என்று தான் அவர் இருக்கிறார் போல என சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top