‘நான் கடவுள்’ படத்துல என்ன நடந்தது? எவ்ளோ பெரிய மேட்டரு? சிம்பிளா சொல்லிட்டாரே பாலா

Published on: March 18, 2025
---Advertisement---

வணங்கான் பாலா:

தன் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவு மேலாதிக்கத்தில் இருக்கும் மனிதர்களால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படையாக தைரியமாக காட்டக் கூடிய ஒரு ஆகச்சிறந்த இயக்குனர் பாலா. எதற்கும் அஞ்சாதவர். தன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதன் படி நடப்பவர். வணங்கான் என்ற பெயருக்கு உண்மையான சொந்தக்காரராக இருப்பவர் இயக்குனர் பாலா. சேது படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

ajith

ajith

முதல் படமே இவருக்கு பெரிய அடியை தந்தது. அதாவது படம் ரிலீஸாக முடியாமல் ஏகப்பட்ட கஷ்டத்தை அடைந்தார் பாலா. இனிமே நம் கெரியர் அவ்வளவுதானா என்ற நிலைக்கே கிட்டத்தட்ட சென்றார். ஆனால் சேது படம் எப்படியோ ரிலீஸானது. ஆனாலும் முதல் வாரம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பு சேது படத்துக்கு கிடைக்கவில்லை. இரண்டாம் வாரத்தில் இருந்துதான் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

நான் கடவுள்:

அதன் பிறகுதான் பாலா இந்த உலகிற்கு நன்கு பரீட்சையமானார். அந்தப் படத்திற்கு பிறகு நந்தா, பிதாமகன், அவன் இவன் , நான் கடவுள் என அடுத்தடுத்து படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் பாலா. அதுவும் நான் கடவுள் படம் பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது. அதற்கு காரணம் அந்தப் படமும் ஆரம்பத்தில் சில பல சிக்கலுக்கு ஆளானதுதான்.

ஏனெனில் அஜித்துடனான பிரச்சனைதான் நான் கடவுள் படத்தை பெரிய அளவில் பேச வைத்தது. அந்த படத்தில் அஜித்தை அடிக்க ஆள் கூட்டி வந்தார் பாலா என்றெல்லாம் பல செய்திகள் வெளியானது. ஆனால் பில்லா ஸ்டைலில் அஜித் துப்பாக்கியை காட்டி அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்றெல்லாம் பரவியது. நான் கடவுள் படத்தின் பெயரை சொன்னாலே முதலில் அஜித்தான் நியாபகத்திற்கு வரும்.

பாவனாவிடம் நேரிடையாக சொன்ன பாலா:

இந்த நிலையில் நான் கடவுள் படத்தில் முதலில் பூஜாவுக்கு பதில் நடிகை பாவனாதான் நடிக்க இருந்திருக்கிறார். ஆனால் பாலாவுக்குத்தான் பாவனாவின் நடிப்பு பிடிக்காமல் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இதை பற்றி பேட்டியில் பாலா கூறும் போது பாவனாவிடமே ‘லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தோம். ஆனால் சரி வரவில்லை. அதனால் படத்தில் இருந்து விலகிக் கொள்’ என கூறியிருக்கிறார்.

bhavana

bhavana

இருந்தாலும் பாவனா ‘இந்தப் படம் ஓகே. ஆனால் அடுத்த படத்தில் உங்களுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக அந்த பேட்டியில் பாலா கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment