சந்தனக்கட்டை மாதிரி இருந்த விஜயகாந்த்… இப்படி ஒரு நிலை வர இதுதான் காரணமா?

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததும் கேப்டன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார். இவர் திரையுலகில் மட்டும் அல்லாது அரசியலிலும் சாதித்தவர் என்றே சொல்லலாம். வானத்தைப் போல, மரியாதை போன்ற சூப்பர்ஹிட் படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கியவர் விக்ரமன்.

மரியாதை படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்தபோது அங்கும் நம்மூரு பிரியாணியை தயார்செய்து கொடுத்தவர் கேப்டன் என்கிறார். அதேபோல கேரவனுக்குள் பெரும்பாலும் செல்ல மாட்டார். யாராவது கட்சிக்காரங்க இவரைப் பார்க்க வந்தால் மட்டுமே உள்ளே அழைத்துச் சென்று பேசிவிட்டு வெளியே வருவாராம். மரியாதை படத்திற்கு கேரவனை பயன்படுத்தியது படத்தின் நாயகி மீராஜாஸ்மின் மட்டும்தான் என்கிறார் விக்ரமன்.

விஜயகாந்தின் உடல்நிலை திடீரென சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் மாறியது. அதுக்கு என்ன காரணம்? அங்கு நடந்தது என்ன என பிரபல இயக்குனர் விக்ரமன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் விக்ரமன் இதுகுறித்து ஒருமுறை கேட்கும்போது அவர்தான் இந்தத் தகவலை சொன்னாராம். வாங்க. அவங்க என்ன சொன்னாங்கன்னு பார்க்கலாம்.

vikraman

vikraman

கேப்டனுக்கு முதல்ல கிட்னி ஆபரேஷன் யுஎஸ்ல பண்ணினாங்க. அது சக்சஸ் ஆச்சு. அப்போ அவருக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்புறம் அவருக்கு ஹார்ட் பிராப்ளம் வந்துருக்கு. அப்போ மேடம் (பிரேமலதா) சொல்லிருக்காங்க. ‘இங்கேயே பைபாஸ் சர்ஜரி செஞ்சிருலாங்க’ன்னு சொல்லிருக்காங்க. ‘இல்ல. பிரஸ்ல எல்லாம் தெரிஞ்சிரும். அதனால சிங்கப்பூர் போய் பண்ணிடலாம்’னு விஜயகாந்த் சொல்லிருக்காரு.

அங்கே அவருக்கு சர்ஜரி பண்ணும்போது அனஸ்தீசியா கொடுக்கையில ஏதோ தப்பாயிடுச்சு. அதனால அவரால நிக்க முடியல. நடக்க முடியல. பேச முடியல. அந்த ஹார்ட் ஆபரேஷன் சக்சஸ் ஆகிடுச்சு. ஆனா மயக்க மருந்து கொடுக்கும்போது ஜாக்கிரதையா கொடுக்கணும். அதுக்கெல்லாம் கோர்ஸ் படிச்சிட்டுத் தான் வர்றாங்க.

ஏதோ தப்பானதால தான் அவருக்கு அந்த மாதிரி ஆகிடுச்சு. மேடம் சொல்லி ரொம்ப அழுதுட்டாங்க. நம்ம வேற தெரியாத்தனமா கேள்வியைக் கேட்டு அவங்களை அழ வச்சிட்டோமேன்னு நினைச்சேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment