Connect with us

Cinema News

ஐய்யா திடீர் தளபதி.. உங்க கண்ணுக்கு இந்த பெண் தெரியலயா? ப்ளூசட்டை மாறனிடம் சிக்கிய அமரன்

சிவகார்த்திகேயன்:

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு நம் நெஞ்சை உலுக்கியது. ஒரு காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படியாவது சேர்ந்து விட மாட்டோமா அங்கு சீட் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம் உண்டு. அந்த அளவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதே ஒரு பெரிய கனவாக அனைவருக்குமே இருந்தது. அப்படிப்பட்ட பேரையும் புகழையும் உடைய பல்கலைக்கழகம் தான் அண்ணா பல்கலைக்கழகம்.

இன்று அதற்கு நிகராக எத்தனையோ பல்கலைக்கழகங்கள் வந்தாலும் இன்றளவும் அந்த பல்கலைக்கழகத்திற்கு என ஒரு தனி மரியாதையே இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் அங்கு போனாலும் பல்கலைக்கழகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பில் இருப்பதை பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்த அநியாயம் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது.

எல்லாம் படத்துல மட்டும்தான் உங்க ஹீரோயிசம்?

அங்கு படிக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அந்த கொடுமை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு வருகின்றது. அதில் இந்த மாணவியின் விவரங்கள் இணையத்தில் திடீரென கசிந்ததால் அதற்கு இழப்பீடாக 25 லட்சம் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு கொடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் சினிமாவில் மட்டுமே பெண்களை காப்பாற்ற துடிக்கும் நடிகர்கள் இந்த விஷயத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பெரும் பதிவை போட்டு பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒரே ஒரு ஆண்மகன் மட்டும்தான் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்.

திடீர் தளபதி:

விஜய்யும் எப்பவும் போல தன்னுடைய அறிக்கை மூலமாக வருந்துகிறேன் என ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அது கூட அவர் அரசியலுக்கு வந்ததனால் தான் இந்த பதிவை போட்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதில் திடீர் தளபதி என குறுக்க மறுக்க ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் ஏன் இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.

செஸ் சாம்பியன் வென்ற குகேஷுக்கு வாட்ச் பரிசாக கொடுக்க தெரியுது. நல்லகண்ணுவை சந்தித்த புகைப்படத்தை பகிரத் தெரியுது. ஆனால் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தெரியலையே என ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன்னுடைய பதிவால் வறுத்தெடுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top