டிஆர்பியில் பட்டைய கிளப்பும் சன் டிவி… திணறும் விஜய் டிவி… செம லிஸ்டா இருக்கே…

Published on: March 18, 2025
---Advertisement---

Serial TRP: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. இதில் வழக்கம் போல மீண்டும் சன் டிவியே ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

டிஆர்பியில் முதலிடத்தில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. பிரச்சினையை மட்டுமே கையாளும் கயல் மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை சிக்க தற்போது டிஆர்பியில் 9.95 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

இதை தொடர்ந்து அடுத்த இடத்தில் சன் டிவியின் சிங்கப் பெண்ணே சீரியல் இடம் பிடித்திருக்கிறது. ஆனந்தி மற்றும் அன்புவின் காதல் தெரிந்த பின்னர் அவருடைய அம்மா அன்புவிற்கு திருமணம் செய்து வைக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 9.92 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.

சன் டிவியின் மருமகள் சீரியல் மீண்டும் பரபரப்பான கதைகளத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் 8.95 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. மூன்று முடிச்சு சீரியல் 8.63 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 8.65 புள்ளிகளுடன் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 8.58 புள்ளிகளுடன் ஆறாம் இடம் பிடித்திருக்கிறது. மேலும் விஜய் டிவியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை 7.65 புள்ளிகளுடன் ஏழாம் இடம் பிடித்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இடம் பெற்றிருக்கிறது. விஜய் டிவி கடந்த சில வாரங்களாக எவ்வளவு முயன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் வர முடியாமல் இருப்பது துரதிஷ்டமான விஷயமாக மாறி இருக்கிறது.

Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்… லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment