Connect with us

throwback stories

கலைஞரை கடுப்பாக்கிய ராஜுசுந்தரம்.. தனுஷ் படத்தில் நடந்த அந்த சம்பவம்

தனுஷ்:

தனுஷ் படத்தின் பூஜை அழைப்பிதழை கொடுக்க போன இடத்தில் ராஜுசுந்தரம் கருணாநிதியிடம் குழந்தைத்தனமாக பேசி கடுப்படைய சம்பவத்தை பற்றி தயாரிப்பாளர் கே.ஆர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கன்னடத்தின் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்கி பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற பெயரில் கே. ஆர் தயாரிக்க நினைத்திருக்கிறார்.

அந்தப் படத்தை ராஜுசுந்தரத்தை வைத்து இயக்க சொல்லியிருக்கிறார். அதுவரை ராஜுசுந்தரம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பிஸியான டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார் ராஜுசுந்தரம். இதனால்தான் படத்தையும் நல்ல முறையில் இயக்கவும் செய்வார் என்ற நம்பிக்கையில் அந்தப் படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் கே. ஆர். மேலும் இந்த படத்தின் கன்னட மொழி படம் ரஜினிக்கு மிகவும் பிடித்த படமாம்.

ரஜினிக்கு பிடித்த படம்:

இதை பல முறை ரஜினி மேடைகளிலும் பேசியிருக்கிறாராம். அதன் காரணமாகத்தான் தமிழ் ரைட்ஸ் எவ்வளவு தொகையானாலும் அந்த ரைட்ஸை வாங்கினேன் என கே.ஆர். கூறினார். மேலும் தனுஷுக்கு முன்பு அந்த கன்னட மொழி படத்தை அஜித்தை பார்க்க சொல்லியிருக்கிறார் ராஜுசுந்தரம். ஆனால் அஜித் ‘இது எனக்கு சரிவராது போல’ என சொல்லி மறுத்துவிட்டாராம்.

நல்லவேளை இழுத்தடிக்காமல் உடனே அஜித் இப்படி சொன்னது நல்லது என கே.ஆர் கூறினார். அதன் பிறகுதான் தனுஷை கன்ஃபார்ம் பண்ணினார்களாம். படத்தின் பூஜைக்கு கலைஞரை அழைக்க அவருக்கு அழைப்பிதலை வைக்க கே.ஆர், ராஜுசுந்தரம் மற்றும் தனுஷ் ஆகிய மூவரும் சென்றிருந்தார்களாம். இவர்களுக்கு காஃபி எல்லாம் கொடுத்து உபசரித்தாராம் கலைஞர்.

கலைஞரிடம் ஓவரா பேசிய ராஜுசுந்தரம்:

அன்று ஞாயிறு கிழமை என்பதால் கலைஞர் கொஞ்சம் ஃபீரியாகவும் இருந்தாராம். உடனே ராஜூசுந்தரம் கலைஞரிடம் ‘ இப்போ நாங்க இருந்த வீட்லதான் நீங்க இருந்தீங்க. இப்ப எப்படி இருக்குனு தெரியுமா?’ என்று குழந்தைத்தனமா பேசிக் கொண்டே இருந்தாராம். அப்போது கலைஞர் முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் பேசிக் கொண்டே இருந்ததை பார்த்த கே.ஆர் ராஜுசுந்தரத்தை காலை மிதித்து அவரை நிறுத்த முயற்சித்திருக்கிறார்.

ஏனெனில் ஒரு முதலமைச்சராக இருப்பவரிடம் எப்படி எந்த விஷயங்களை பேச வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறதல்லவா? பழைய விஷயங்களை சொல்ல சொல்ல கலைஞரின் முகத்தை பார்த்து நான் புரிந்து கொண்டேன். அன்று ராஜுசுந்தரம் அப்படி கடுப்படைய செய்துவிட்டார் என கே. ஆர். கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in throwback stories

To Top