Connect with us

Cinema News

எல்லாமே பாலா கொடுத்தது!.. படத்திலிருந்து ஓடிய சூர்யா என்ன பேசியிருக்கார் பாருங்க!…

Bala25: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. அந்த படம் பலரையும் பாதித்தது. ஒரே நாளில் விக்ரமுக்கும், பாலாவுக்கும் ரசிகர்கள் உருவானார்கள். அதன்பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இப்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பாலா சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையிலும் இன்று சென்னையில் ஒரு விழா நடந்தது.

இதில், இயக்குனர்கள் மணிரத்னம், லிங்குசாமி, வசந்தபாலன் என பலரும் கலந்து கொண்டனர். அதோடு, நடிகர் சூர்யாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ‘நான் இன்று ஒரு நடிகராக இருப்பதற்கு காரணமே பாலா அண்ணன்தான். அவர் இல்லையேல் நான் இல்லை. சேது படத்தை பார்த்துவிட்டு இப்படி ஒரு நடிகர் நடிக்க முடியுமா?. இப்படி ஒருவரால் இயக்க முடியுமா? என யோசித்தேன். 100 நாட்கள் அந்த படத்தின் பாதிப்பு எனக்கு இருந்தது.

என்னை நந்தா படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின்னர்தான் எல்லாம் மாறியாது. அந்த படத்தை பார்த்துவிட்டுதான் கௌதம் மேனன் காக்கா கக்கா படத்தை கொடுத்தார். காக்க காக்க பார்த்துவிட்டு முருகதாஸ் எனக்கு கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதற்கெல்லாம் காரணம் பாலா அண்ணன்தான்.

suriya

suriya

எனக்கு சிகரெட் குடித்து பழக்கமில்லை. நந்தா படத்தில் அதை பாலா அண்ணன் அதை சொல்லி கொடுத்தார். இப்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கும் அதுதான் உதவியது என பேசியிருக்கிறார். மேலும், வணங்கான் படத்தில் நடித்த அருண்விஜய்க்கும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

பிதாமகன் படத்திற்கு பின் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை.ஆனால், 3 வருடங்களுக்கு முன்பு திடீரென பாலவை அழைத்து நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன் என்றார். அப்படி உருவான படம்தான் வணங்கான். ஆனால், சில நாட்கள் நடித்துவிட்டு ஏதோ பிடிக்காமல் அந்த படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. அதன்பின் அருண் விஜயை வைத்து இப்படத்தை இயக்கி அப்படத்தை பாலாவே தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், இன்று நடந்த விழாவில் இப்படி பேசியிருக்கிறார் சூர்யா.

Continue Reading

More in Cinema News

To Top