நாளுக்கு நாள் அதிகரிக்கும் நயன்தாரா அட்ராசிட்டி!.. உலகத்திலேயே இல்லாத வழக்கமால்ல இருக்கு..

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. 20 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோயினியாக ஜொலித்து வருகின்றார். இவருடன் போட்டியாக இருந்த பல நடிகைகள் பீல்ட் அவுட்டாகி உள்ள நிலையில் இவரும், நடிகை திரிஷாவும் தற்போது வரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருகிறார்கள்.

திருமணம் குழந்தை:

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா.

ஒரே பிசி:

சினிமாவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து நடித்து வருகின்றார் நடிகை நயன்தாரா. ஒரு பக்கம் கணவன் குழந்தைகள் மற்றும் பிசினஸ் என்று கவனம் செலுத்தினாலும், மற்றொரு பக்கம் சினிமாவில் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது தனது கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இதில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், தற்போது ராக்காயி என்கின்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் நடிகை நயன்தாரா.

வலைப்பேச்சு தாக்குதல்:

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை நயன்தாரா வலைப்பேச்சு டீமை தாக்கி பேசியிருந்தார். அவர்களை மூன்று குரங்குகள் என்று கூறி பாடி ஷேமிங் செய்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பதிலுக்கு வலைப்பேச்சு டீமும் தொடர்ந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் நயன்தாராவை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.

தனி மானிட்டர்:

என்னதான் சமூக வலைதள பக்கங்களில் நயன்தாரா குறித்து சர்ச்சையான விஷயங்கள் வந்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து தனது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றார் நயன்தாரா. தற்போது அவர் செய்திருக்கும் மற்றொரு விஷயம் தான் இயக்குனரையும், ஒளிப்பதிவாளரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.

அதாவது பொதுவாக ஒரு படம் எடுக்கும் போது அது சரியாக வந்திருக்கின்றதா என்பதை மானிடர் மூலமாக பார்த்துக்கொள்வார்கள். இதனை பார்ப்பதற்கு அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், இயக்குனருக்கு மட்டுமே அனுமதி இருக்கின்றது. ஆனால் நடிகை நயன்தாரா தனக்கு தனி மானிட்டர் வேண்டும் என்றும், அதன் மூலமாக எனது உடை அலங்கார நிபுணர்கள் சரியாக இருக்கின்றதா என்பதை பார்ப்பதற்கு வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

இதை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். இந்திய சினிமாவில் அல்ல உலக சினிமாவிலேயே எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் நடிகைகளுக்கு தனி மானிட்டர் வைத்தது கிடையாது. ஆனால் நடிகை நயன்தாரா இப்படி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment