நல்லா சமாளிக்கிறீங்க!.. கங்குவா குறித்த கேள்வி.. வாயை விட்டு மாட்டிக்கிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..

Published on: March 18, 2025
---Advertisement---

கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த படம் உலகம் எங்கும் 1000 கோடி வசூல் செய்யும் என்று நம்பியிருந்தார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் அது எல்லாம் பொய்யாகிவிட்டது. படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கு நெகடிவ் கமெண்ட்களை கொடுத்து வந்தார்கள்.

படத்தின் கதையில் சுவாரஸ்யம் இல்லை இரைச்சல் அதிகமாக இருக்கின்றது என்று தொடர்ந்து ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காரணத்தால் அடுத்தடுத்த நாட்களில் படம் திரையரங்குகளில் காத்து வாங்கிக் கொண்டிருந்தது. இதனால் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சரிவை சந்தித்தது கங்குவா திரைப்படம்.

கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா இந்த திரைப்படத்திற்கு தனது முழு உழைப்பையும் போட்டு நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த திரைப்படம் நன்றாக இருக்கின்றது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத புதுமையான விஷயங்களை பயன்படுத்தி படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

ஆனால் படம் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்களும் தயாரிப்பாளர்களும் படத்தை வேண்டும் என்றே திட்டமிட்டு தோல்வியடைய செய்து விட்டார்கள் என்று கூறினார்கள். அதிலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவை ஆதரித்தும் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராகவும் போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார்.

இவை அனைத்துமே சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனது கருத்தை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘கங்குவா திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் எனது அம்மா பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். படம் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

அப்படத்திற்கு நீங்கள் எதிர்மறையான விமர்சனங்களை கூறுகிறீர்கள் என்றால் அதை யார் மனதையும் புண்படுத்தாமல் கூறலாம். படம் என்றால் ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது. அப்படி இருக்கும் போது யாரையும் புண்படுத்தாமல் ஒரு விஷயத்தை சொன்னால் ரொம்ப நன்றாக இருக்கும். பிடிக்கவில்லை என்றால் அதை ஓப்பனாக செல்லலாம் தவறில்லை. ஆனால் புண்படுத்தும் வகையில் சொல்லக்கூடாது’ என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நல்லா சமாளிக்கிறீங்க மேடம் என்று தங்களது கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment