நாக சைதன்யா காலில் விழுந்த சோபிதா.. இதுதான் காரணமா?!.. வைரல் வீடியோ!..

Published on: March 18, 2025
---Advertisement---

Nagachaitanya: தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஐதராபத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தாத்தா நாகேஸ்வரராவ் சிலைக்கு முன்பாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முன்னதாக சமந்தாவை காதலித்து மணந்து பின்னர் விவகாரத்து செய்ததால் சைதன்யா – துலிபாலா திருமணம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக சைதன்யாவின் 2வது திருமணம் பிரிவை சந்திக்கலாம் என தெலுங்கு ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியதும் இதற்கு காரணமாக உள்ளது.

இந்தநிலையில் திருமண நிகழ்வில் சைதன்யாவின் காலில் சோபிதா ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருமுறை மட்டுமே இது நிகழ்ந்து இருந்தால் இதை ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்களோ என்னவோ? ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சோபிதா இவ்வாறு செய்தார். அப்போது சைதன்யா முகம் ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல இருந்தது.

காலில் விழும் இந்த கலாச்சாரத்தை ஒரு சாரார் இதை ஆதரிக்க, மற்றொரு பிரிவினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து நெட்டிசன்கள் ‘இவர் என்ன பெரிய கடவுளா? காலில் விழுவதை பார்த்துக்கொண்டு வரம் கொடுப்பது போல நிற்கிறார்.

பெண்ணியம் பேசும் பலரும் இதே தப்பை செய்கின்றனர். இந்த சடங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்,’ என்பது போல பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்களின் பின்னணியில் தங்களின் மனங்கவர்ந்த சமந்தாவை, சைதன்யா விவாகரத்து செய்த கோபமும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment