Connect with us

Cinema News

விடுதலை 2ல் வரும் அந்த டயலாக்… விஜயைக் குறிக்கிறதா? விஜய் சேதுபதி சொல்றதைப் பாருங்க

வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் வரும் டிசம்பர் 20ல் வெளியாக உள்ளது. முதல் படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து இருந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இளையராஜாவின் இசை அருமையாக இருந்தது. பாடல்களும் ரம்மியமாக இருந்தன. குறிப்பாக ஒண்ணோட நடந்தா, காட்டுமல்லி ஆகிய பாடல்கள் தூள் கிளப்பின.

soori

soori

அந்தப் படத்தில் விஜய் சேதுபதி சில காட்சிகளிலேயே வந்தாலும் நம்மை அசர வைத்து இருந்தார். மக்கள் படை தலைவராக பெருமாள் என்ற வாத்தியார் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குமரேசன் என்ற கான்ஸ்டபிளாக சூரி வலம் வந்தார்.

விஜய்சேதுபதியை பிடிக்கும் நோக்கத்துடன் அவர் காட்டும் மிரட்சியான பார்வையும், சாகசங்களும் சூரிக்கு இப்படியும் நடிக்கத் தெரியுமா என்று நம்மையே அசர வைத்தன. போலீசாரின் அடக்குமுறையும், மக்களிடம் விழிப்புணர்வையும், எழுச்சியையும் உண்டாக்கும் கேரக்டரில் விஜய்சேதுபதியும் நடித்து இருப்பது படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

2ம் பாகத்தில் தான் அவருக்கான ஸ்கோப் நிறைய உள்ளது என்றார்கள். அதன்படி 2ம் பாகத்தின் டிரைலர் வரும்போதே அவருடைய காட்சிகள் தான் அதிகமாக வருகின்றன. இவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், அட்டகத்தி தினேஷ், போஸ் வெங்கட் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

viduthalai 2

viduthalai 2

‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது’ன்னு ஒரு டயலாக் வரும். இது டிரைலர் வந்த புதிதில் விஜயைத் தான் தாக்குகிறது என்று பேசப்பட்டது. ஏனென்றால் ரசிகர்களை அதிகமாக தற்போது ஈர்த்து வருபவர் தளபதி விஜய் தான்.

அவர் தற்போது கட்சித்தலைவர் ஆகி விட்டார். பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி முடித்து விட்டார். ஆனால் ரசிகர்களை வைத்து அவருக்கு வாக்கு வங்கியைக் கணக்கிட முடியாது என்று பேசப்பட்டது. அதனால் இந்த டயலாக் விஜய்க்கு பொருந்துமோ என்றும் பேசப்பட்டது.

ஆனால் இந்த டயலாக் படத்தின் கதைப்படி தான் அந்த டயலாக் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தில் நடித்த விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

படத்தில் என்னோடு பேசும் தோழர் ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் தான் அது. நாங்கள் சொல்ல வருவது, என்னை தலைவனாக பார்க்கும்போது ரசிகனின் மனநிலையில் பார்க்கக் கூடாது என்பதுதான். உங்கிட்ட சித்தாந்தம் இருந்தால் தான் உங்கள் மத்தியில் இருந்து ஒரு தலைவர் வருவான்.

என்ன ஒரு ரசிகனாக பார்க்க வேண்டாம் என்று வாத்தியார் சொல்வது தான். விடுதலை 2 படத்தின் ட்ரைலரின் கடைசியில் வரும் வசனம் விஜயைக் குறிப்பிடுகிறதா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலை 2ம் பாகத்திலும் இளையராஜாவின் இசை இந்தப் படத்திலும் மனதை வருடுகிறது. மனசுலா, தினம் தினமும் ஆகிய ரம்மியமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 81 வயதிலும் இவ்வளவு அருமையாக இசை அமைத்துள்ளார் என்றால் ஆச்சரியம்தான்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top