latest news
ரஜினி எப்போதும் சுறுசுறுப்பா இருக்க இதுதான் காரணமா? அட இது தெரியாமப் போச்சே!
Published on
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மேடையில் பேசும்போது நான் யானை அல்ல. குதிரை. விழுந்தா டப்புன்னு எழுந்துடுவேன்னு சொல்லி இருந்தார். அது உண்மைதான். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தால் ரசிகர்கள் கோவில்களில் வேண்டுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
அலகு குத்துவதும், காவடி எடுப்பதும், அபிஷேகம் செய்வதும் என அவர்களுடைய பிரார்த்தனை நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் மறுபடியும் சிகிச்சை முடிந்து பழைய ரஜினி மாதிரி சுறுசுறுப்பாக ஆகி விடுகிறார்.
இது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இதன் பின் அவர் எவ்வளவு ஒர்க் அவுட் பண்ணுகிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது என்னன்னு பார்க்கலாமா…
60 வருஷமா டெய்லியும் ஒரு மணி நேரம் வாக்கிங் பண்றேன். 20 நிமிஷம் சிம்பிளா யோகாசனம் பண்றேன். இருபது நிமிஷம் பிராணாயாமம் பண்றேன், சோபால, பெட்ல எல்லாம் உட்காருவது கிடையாது. தூங்குறது தரையில தான் மேக்ஸிமம். வெள்ளை நிற உணவுகளை தவிர்க்கிறேன்.
சர்க்கரை, சால்ட், மைதா, சாதம், பால், தயிர், வெண்ணை, மாத்திரை இது எல்லாம் நான் அவாய்ட் பண்றேன். அப்புறம் ஏதாவது தேவையில்லாத எண்ணங்கள் வந்தால் குரு மந்திரத்தை ஜெபிச்சிட்டு இருப்பேன். எண்ணங்கள் நல்லா இருந்தால்தான் மனசு நல்லா இருக்கும். மனசு நல்லா இருந்தா தான் வாழ்க்கை நல்லா இருக்கும் என்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினி இந்த வயதிலும் வேகமான செயல்பாடுகிறாரே அதுக்கு என்ன காரணம் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் முன்னாலே எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால் ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் அதுக்கு முழுமையான உழைப்பைத் தர வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர் ரஜினிகாந்த். அவருடைய வேகம் குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று சித்ரா லட்சுமணனே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சிலர் சினிமாவில் ஒரு மாதிரியாகவும், நிஜத்தில் வேறு மாதிரியாகவும் இருப்பார்கள். ஆனால் ரஜினி சினிமாவிலும் சரி. நிஜத்திலும் சரி. அதே வேகம். அதே ஸ்டைல். அதே சுறுசுறுப்பு. ஆறிலிருந்து அறுபது வரை அவரை அனைவரும் விரும்புவதற்குக் காரணமே அவருடைய அந்தத் தனித்துவம்தான்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...