Connect with us

தட புடலாக நடந்த கீர்த்தி சுரேஷின் திருமணம்.. தம்பதி சகிதமா எப்படி இருக்காங்கனு பாருங்க

latest news

தட புடலாக நடந்த கீர்த்தி சுரேஷின் திருமணம்.. தம்பதி சகிதமா எப்படி இருக்காங்கனு பாருங்க

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவருடைய திருமணம் இன்று கோவாவில் நடைபெறுவதாக தகவல் வெளியானது. இப்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

இந்த திருமணத்தில் நடிகர் விஜய் பட்டுச்சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்து தன்னுடைய காவலர்களுடன் கலந்து கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது .

தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி என்பவரை இன்று கரம்பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கோவாவில் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. முன்னதாக கீர்த்தி சுரேஷ் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டது.

அதாவது இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி மூன்று நாட்கள் இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இப்போது வெளியான புகைப்படங்களை பார்க்கும் பொழுது முதலில் இந்து முறைப்படி திருமணம் நடந்திருப்பதாக தெரிகிறது.

ஏனெனில் அவருடைய அம்மாவான மேனகா இந்து என்பதால் இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. அவருடைய கணவரான ஆண்டனி ஒரு கிறிஸ்தவர் என்பதால் ஒருவேளை கிறிஸ்தவ முறைப்படி அந்த வகையிலும் அவரை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தான் இவர் இந்தியில் அட்லி தயாரிப்பில் தெறி படத்தின் ரீமேக்கில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் மூலம் ஒரு பேன் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் .

இவர் 12 ஆம் வகுப்பிலிருந்து தனது நண்பரான ஆண்டனியை காதலித்து வந்ததாக தெரிகிறது .இவர் ஐடி மற்றும் ஹோட்டல் பிசினஸ் என ஏராளமான தொழில்களை கவனித்து வருகிறாராம்.

இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த சிலரும் தான் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் விஜய் நேரில் சென்று கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனியை வாழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top