சுயநினைவை இழந்த பாரதிராஜா.. நல்லா மிஸ்யூஸ் பண்றாங்க.. வெளுத்து வாங்கிய பிஸ்மி…

Published on: March 18, 2025
---Advertisement---

பாரதிராஜா:

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சேரும், அதிலும் நாட்டுப்புற கதைகளை படம்பிடிப்பதில் வல்லவர். இசையமைப்பாளர் இசைஞானியுடன் இணைந்து மறக்க முடியாத பல படங்களை கொடுத்தவர்.

தமிழ் சினிமாவில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்ளிட்ட பல கதாநாயகிகளை அறிமுகம் செய்திருக்கின்றார். தமிழில் பல படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்த இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மலேசியாவில் தனது மகள் வீட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

தயாரிப்பாளர் சங்கம் புகார்:

கங்குவா திரைப்படத்திற்கு வந்த விமர்சனங்களை பார்த்து தயாரிப்பாளர் சங்கம் முதல் மூன்று நாட்களுக்கு படம் தொடர்பான எந்த விமர்சனத்தையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது. விமர்சனங்களால் பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறி இருக்கின்றது என்று கூறி இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

பிஸ்மியின் கருத்து:

தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு புகார் கொடுத்தது தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது ‘ தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு புகாரை கொடுத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த விஷயம் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு தனிப்பட்ட நபர்கள் செய்த கூட்டு சதி. தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் (தனஞ்செயன்) ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் ஒரு வேலை பார்த்து வருகின்றார். அவர்கள் தயாரித்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று அந்த நிறுவனத்திற்கு வாலாட்டுவதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை துஷ்பிரயோகம் செய்து இப்படி ஒரு புகாரை கொடுப்பதற்கு வலியுறுத்தி இருக்கின்றார்.

மேலும் ஒரு தயாரிப்பாளருடன் சேர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இரண்டு வயித்தெரிச்சல் காரர்கள் உடைய செயல்பாடு தான் இந்த கோர்ட்டுக்கு சென்ற வேலை. நல்ல வேலையாக கோர்ட்டும் இவர்கள் நினைத்தது போல் தீர்ப்பு வழங்கவில்லை. இவர்கள் செய்த வேலைக்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் என்று நாம் கூறி விடமுடியாது. எதற்கு என்றால் ஆக்டிவ் ப்ரொடியூசர் கவுன்சில் தலைவர் பாரதிராஜா.

தற்போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை. இன்னும் கூறப்போனால் அவர் நெருங்கி பழகியவர்கள் எதிரில் போய் நின்னாலே அவர்களை நினைவுபடுத்துவதற்கு கூட அவரால் முடியவில்லை. அவர் நினைவு தப்பிய நிலையில் தான் தற்போது இருந்து வருகின்றார். மேலும் மலேசியாவில் தனது மகள் வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டு ஓய்வு எடுத்து வருகின்றார்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் அவர்களின் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு, அந்த டிஜிட்டல் கையெழுத்தை வைத்துக்கொண்டு இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவேளை பாரதிராஜா இருந்திருந்தால் இதற்கு நிச்சியம் சம்மதித்திருக்க மாட்டார். அதற்கு காரணம் அவர் விமர்சனங்களால் முன்னுக்கு வந்தவர். அவர் ஒருபோதும் இதுபோன்ற செயலுக்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்’ என்று பேசியிருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment