Connect with us

Cinema News

நாக சைதன்யாவுக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கே.. சமந்தா போட்ட பதிவு

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் சமீபத்தில்தான் நடைபெற்றது. பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை கரம்பிடித்தார் நாக சைதன்யா. இவர்களது திருமணம் கோலாகலமாக குடும்ப முறைப்படி நடைபெற்றது. திரையுலகை சார்ந்த பலரும் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் நாகர்ஜூனாவின் குல தெய்வத்தை வழிபட்டனர். திருமண புகைப்படங்களை நாகர்ஜூனா அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்தார். இந்த நிலையில் சமந்தாவின் ரியாக்‌ஷன் எதுவும் இருக்குமா என நெட்டிசன்கள் அவ்வப்போது சமந்தாவின் இணைய தள பக்கத்தை கண்காணித்து வந்தனர்.

சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் செகண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருவரும் நடித்திருந்தனர். அதே படம் தெலுங்கில் ரீமேக்காகும் போது இவர்கள்தான் ஹீரோ ஹீரோயின்களாக நடித்தனர்.

இந்த நிலையில் சமந்தாவின் ஒரு இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அதில் தன் செல்லப்பிராணி ஷாஷா என்ற நாயுடன் இருக்கும் மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். கூடவே சாஷா காதல் போன்ற காதல் இல்லை என்று பதிவிட்டிருக்கிறார். இதையும் நெட்டிசன்கள் டீ கோடிங் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஒரு நாய் காட்டுகிற அன்பை கூட கூட இருக்கிறவர்கள் காட்டுவது இல்லை என நாக சைதன்யாவை குறிப்பிட்டுத்தான் மறைமுகமாக சமந்தா அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top