Connect with us

latest news

கண்ணதாசனுக்கு சவால் விட்ட இயக்குனர்… கவியரசருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா…!

கவியரசர் கண்ணதாசன் தமிழ்த்திரை உலகில் மனது மறக்காத வகையில் பல காதல் மற்றும் தத்துவப்பாடல்களை எழுதியுள்ளார். இவை எல்லாமே சூப்பர்ஹிட்டுகள் தான். இவர் பாடல் எழுதினார் என்றாலே படமும் சூப்பர்ஹிட்டாகத் தான் இருக்கும். அந்த வகையில் இவர் தமிழ்த்திரை உலகில் ஆளுமையுடன் வலம் வந்தார். இயக்குனர் ஸ்ரீதர் உடன் இணைந்து கண்ணதாசன் ஒரு படத்துக்கு பாடல் எழுதும்போது ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியது.

அது சிவாஜி, முத்துராமன் இணைந்து நடித்த சூப்பர்ஹிட் படம் நெஞ்சிருக்கும் வரை. இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, கீதாஞ்சலி உள்பட பலரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் 1967ல் வெளியானது. அந்தக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது. பாடல்கள் எல்லாமே முத்து முத்தாக இருக்கும். ஒரு பாடல் மட்டும் வாலி எழுதினார். மற்ற எல்லாவற்றையும் கவியரசர் தான் எழுதினார்.

இந்தப் படத்தில் முத்துக்களோ கண்கள் என்று ஒரு பாடல் உண்டு. இதை டிஎம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் இணைந்து பாடினர். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இந்தப் பாடலுக்கு சிவாஜி மேக்கப்பே போடாமல் நடித்து இருந்தாராம்.

பாடலுக்கான கம்போசிங் நடந்தது. அப்போது பாடலுக்கான சிச்சுவேஷனை இயக்குனர் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் சொல்கிறார். ‘இந்தப் பாடலில் காதலை இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும்’ என்றும் நிபந்தனை விதித்தாராம். கண்ணதாசனுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம். கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.

nenjirukkum varai

nenjirukkum varai

அவர் கவியரசர் அல்லவா. வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டின. ‘முத்துக்களோ கண்கள்… தித்திப்பதோ கன்னம்’ என்றாராம். அதற்கடுத்த வரிகளில் ஸ்ரீதருக்கோ இன்ப அதிர்ச்சி. என்னன்னு பாருங்க. ‘சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை…’ அடடா இப்படியும் ஒரு கவிஞரா என்று வியந்தே போனாராம் ஸ்ரீதர்.

ஸ்ரீதரைப் பொருத்தவரை அவரே பெரிய இயக்குனர். எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியது மட்டும் அல்லாமல் அத்தனை ஹிட்டுகளைக் கொடுத்தவர் அவர். ஆனால் அவரே வியந்து விட்டார் கவியரசரின் இந்த இரு வரிகளில். ஆனாலும் அந்தப் பாடல் உருவாகும் போது ஸ்ரீதர் செய்த வேலை தான் உச்சக்கட்டம். அதாவது முதல் வரியான ‘முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’ என்று சொன்னதும் கவியரசரிடம் உடனே அது பிடித்துவிட்டது என்று சொல்லி விடக்கூடாது என்று பிடிக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுத்தாராம்.

ஆனால் அடுத்த வரியில் ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை’ என்று கண்ணதாசன் சொன்னதும் அசந்துபோனாராம். அப்போது அருகில் எழுதிக் கொண்டு இருந்த கண்ணதாசனின் உதவியாளர் மதுரை ஜிஎஸ்.மணி அப்படியே கண்ணதாசனின் காலில் விழுந்து தெய்வமே என்று வணங்கினாராம். மேற்கண்ட தகவலை கண்ணதாசனின் மகன் கோபி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top