Cinema News
மலையாளப்படங்களில் நடிப்பதில் தனுஷூக்கு என்ன சிக்கல்? நடிச்சாருன்னா வேற லெவல்தான்..!
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்து அசத்தி விட்டார். தமிழில் இவர் நடித்த பல படங்கள் வெற்றிவாகை சூடின. இந்தியில் 2013ல் ராஞ்சனா என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கும். அதிகம் மிகைப்படுத்தப்பட்டு இருக்காது. ஓவரா பந்தாவும் பண்ணமாட்டார். இதுவே இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

dhanush
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறன்களையும் கொண்டவராக தனுஷ் இப்போது வளர்ந்து விட்டார். இவர் தனது திரையுலக வாழ்வில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக 14 சர்வதேச விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 4 தேசிய விருதுகள் என இவர் வாங்கிக் குவித்துள்ளார்.
தற்போது இட்லி கடை என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். இதுவரை 4 படங்களை இயக்கி விட்டார். பவர் பாண்டி படத்தை 2017ல் இயக்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து இந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.
அதுமட்டும் அல்லாமல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அது தவிர தற்போது இயக்கி வரும் படம் இட்லி கடை. இது அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.இந்தப் படத்துக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளது.
தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்க உள்ளார். நடிப்பிலும் இயக்கத்திலும் பிசியாக உள்ள அவருக்கு சமீபத்தில் நயன்தாராவுடன் பெரிய அளவில் பிரச்சனை வந்தது. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் போய்க்கொண்டு தான் உள்ளது. இந்த சூழலில் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.

idli kadai
ஆனால் இவரைப் பற்றி நடிகர் ரோபோசங்கர் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார். அது கவனிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது. அவருடன் மாரி 2 படத்தில் நடித்துள்ளேன். அவரைப் பொருத்தவரை யாரையும் ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் ரோபோ சங்கருடன் பழகும்போது குழந்தையாகவே மாறிவிடுவாராம்.
தனுஷ் குறித்து வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அது என்னன்னு பாருங்க. தனுஷ் மலையாளப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கான்னு அந்த வாசகர் கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.
தனுஷ் இப்போது வாங்கிக் கொண்டு இருக்குற சம்பளத்தைப் பார்க்கும்போது அவர் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவாகவே இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனா மலையாளப்படத்துல நடிச்சாருன்னா நிச்சயமாக தனுஷ் வெற்றிவாகை சூடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏன்னா தனுஷைப் பொருத்தவரைக்கும் இயற்கையான நடிப்பில் மலையாள நடிகர்களைப் போல நடிக்கிற நடிகர் தான் அவர் என்கிறார்.